தமிழகத்தில் சினிமா டிக்கெட் ஆன்லைனில் மட்டுமே விற்பனை | அமைச்சர் கடம்பூர் ராஜூ அதிரடி

 

தமிழகத்தில் சினிமா டிக்கெட் ஆன்லைனில் மட்டுமே விற்பனை | அமைச்சர் கடம்பூர் ராஜூ அதிரடி

சங்கத்து ஆட்கள், சங்கத்து ஆட்களுக்கு வேண்டிய ஆட்கள் என்று திரைத்துறை அதள பாதாளத்தில் வீழ்ந்து கிடக்கிறது.  பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது திரையரங்குகளில் 500 ரூபாய் முதல் 1000 ரூபாய்க்கு மேல் டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுவதாக அதிக புகார்களும் தொடர்ந்து வருகிறது

பெரிய அளவில் வசூல் குவிக்கும் நடிகர்களான ரஜினி, கமல், விஜய், அஜித் படங்களுக்கே இப்போதெல்லாம் திரையரங்குகளில் பெரிய அளவில் கூட்டம் வருவதில்லை. தமிழ் ராக்கர்ஸ் கைங்கர்யத்தில் எல்லோரும் வீட்டிலிருந்தபடியே வசதியாக படங்களைப் பார்த்து வருகின்றனர். ஒவ்வொருமுறையும் ஐசியு வில் இருக்கும் திரைப்படத்துறையை காப்பாற்ற விதவிதமான திட்டங்களைத் தீட்டினாலும், கூடவே பிரச்சனை செய்வதற்கென்றே சங்கங்களும் திரைத்துறையில் முளைத்திருக்கின்றன.

சங்கத்து ஆட்கள், சங்கத்து ஆட்களுக்கு வேண்டிய ஆட்கள் என்று திரைத்துறை அதள பாதாளத்தில் வீழ்ந்து கிடக்கிறது.  பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது திரையரங்குகளில் 500 ரூபாய் முதல் 1000 ரூபாய்க்கு மேல் டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுவதாக அதிக புகார்களும் தொடர்ந்து வருகிறது. இதேபோல் திரையரங்குகளில் விற்கப்படும் உணவுப்பொருட்களின் விலையும் மிக அதிகமாக இருப்பதாகவும் நீண்ட காலமாக புகார்கள் எழுந்து வருகிறது. இந்த விஷயத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவ்வப்போது கோரிக்கைகள் வரும். இந்நிலையில் கோவில்பட்டியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு, தமிழகத்தில் ஆன்லைனில் மட்டுமே சினிமா டிக்கெட் விற்பனை செய்யும் முறை விரைவில் அமலுக்கு வர உள்ளதாக தெரிவித்துள்ளார். டிக்கெட் வழங்குவதில் ஏற்படும் முறைகேடுகளை தடுக்க ஆன்லைன் நடைமுறை கொண்டுவரப்படும் என்று அப்போது அமைச்சர் விளக்கம் அளித்தார்.