ட்விட்டரில் ட்ரெண்டாகும்  #17YearsOfDhanushism

 

ட்விட்டரில் ட்ரெண்டாகும்  #17YearsOfDhanushism

‘இஃப் யு ஆர் பேட் ஐயம் யுவர் டாட் ….’ என உருவத்துக்கும் வசனத்தும் சம்பந்தமே இல்லாமல் பேசி, ரசிகர்கள் மனதில் உத்தம புத்தரனாக ஜொலிக்கும் தனுஷ் திரையுலகிற்கு வந்து இன்றுடன் 17 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதனை கொண்டாடும் விதமாக அவரது ரசிகர்கள் #17YearsOfDhanushism என்ற ஹேஷ்டேக்கை சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். 

‘இஃப் யு ஆர் பேட் ஐயம் யுவர் டாட் ….’ என உருவத்துக்கும் வசனத்தும் சம்பந்தமே இல்லாமல் பேசி, ரசிகர்கள் மனதில் உத்தம புத்தரனாக ஜொலிக்கும் தனுஷ் திரையுலகிற்கு வந்து இன்றுடன் 17 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதனை கொண்டாடும் விதமாக அவரது ரசிகர்கள் #17YearsOfDhanushism என்ற ஹேஷ்டேக்கை சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். 

Dhanush1

பிரபல கிராமக்கதைகளின் இயக்குனர் கஸ்தூரிராஜாவின் மகன், இயக்குனர் செல்வா ராகவனின் தம்பி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மருமகன் எனப் பல தகுதிகள் இருந்தாலும் தன்ஷு திரையுலகில் வெற்றியை நிலைநாட்டுவதற்கு அவரின் எதிர்நீச்சலும், திறமையும்தான் காரணம்… 

தனது சகோதரர் செல்வராகவன் மூலமாகத் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார் தனுஷ். 2௦௦2ல் தமிழ்த் திரையுலகில் ‘துள்ளுவதோ இளமை’ என்ற படம் மூலமாக தமிழில் அறிமுகமான அவர், ஒரு பின்னணிப் பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் எனப் படிப்படியாக உயர்ந்து, இன்று தமிழ் மட்டுமல்லாது ஹிந்தித மற்றும் மலையாள திரையுலகிலும் தடம் பதித்து வெற்றிக்கொடியை நட்டுள்ளார். 

Dhanush 2

முதல் படமான துள்ளுவதோ இளமை பெரிதாக கைக்கொடுக்கவில்லை என்றாலும் அதன்பின் வெளிவந்த காதல் கொண்டேன், திருடா திருடி மற்றும் தேவதையைக் கண்டேன் ஆகிய படங்கள் தனுஷ்க்கு தனி அடையாளத்தை கொடுத்தன. 2010க்கு பிறகு தனுஷ்க்கு நல்ல காலம் பிறந்தது என்றே சொல்லலாம். ஏனெனில் அதன்பின் வெளிவந்த குட்டி, உத்தமபுத்திரன், மாரி, தங்க மகன், வேலையில்லா பட்டதாரி, அனேகன், மரியான், யாரடி நீ மோகினி உள்ளிட்ட அனைத்து படங்களும் மரண மாஸ்தான். இளம் வயதில் நடிகர் கனவுடன் திரையுலகில் நுழைந்த தனுஷ்  ‘மயக்கம் என்ன’, ‘3’, ‘எதிர் நீச்சல்’, ‘மரியான்’ போன்ற படங்களில் பாடலாசிரியராகவும், ‘3’, ‘எதிர் நீச்சல்’ படத்தில் தயாரிப்பாளராகவும் உருவெடுத்தார். 2011 ஆம் ஆண்டில் அவர் நடித்த ‘ஆடுகளம்’ படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான ‘தேசிய விருது’, ‘தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது’ மற்றும் ‘ஃபிலிம்ஃபேர் விருது’ போன்ற விருதுகளை வென்று குவித்தார்.

Dhanush 3

அதன்பின் 2012ல் நடித்து வெளியான ‘3’ படத்தின் சிறந்த நடிகருக்கான ‘விஜய் விருதையும்’ வென்றுள்ளார். ‘3’ படத்தில் அவர் எழுதிப் பாடிய பாடலான ‘ஒய் திஸ் கொலவெறி கொலவெறி கொலவெறிடி’ என்ற பாடல், யூட்யூப் இணையத்தளத்தில் வெளியாகி, சில மணி நேரங்களிலேயே அதிகளவில் பார்வையிடப்பட்டதால், ஓரிரு நாட்களிலேயே தேசிய அளவில் புகழ்பெற்றார். குறுகிய காலத்தில் புகழின் உச்சிக்கே சென்ற நடிகர் தனுஷ், உருவத்தில்தான் ஒல்லி நடிப்பில் கில்லி என்றால் அது மிகையாகாது.