சூர்யாவுடன் சிட்டுக்குருவி! கருத்து சொல்லும் சூரரைப் போற்று படத்தின் 2 ஆவது போஸ்டர்!

சூர்யாவுடன் சிட்டுக்குருவி! கருத்து சொல்லும் சூரரைப் போற்று படத்தின் 2 ஆவது போஸ்டர்!

சூரரைப் போற்று படத்தின் இரண்டாவது லுக் இன்று வெளியாகியுள்ள நிலையில் #SooraraiPottruSecondLook என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. 

சூரரைப் போற்று படத்தின் இரண்டாவது லுக் இன்று வெளியாகியுள்ள நிலையில் #SooraraiPottruSecondLook என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. 
என்.ஜி.கே, காப்பான் படங்களை தொடர்ந்து இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துவரும் திரைப்படம் சூரரைப் போற்று. இந்த படத்தில் கதாநாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்துவருகிறார். சூர்யாவின் 2 டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் சிக்யா என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்துக்கு  ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். நிக்கேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவு செய்கிறார். இந்தியாவில் முதல் பட்ஜெட் விமானப் பயணத்தை உருவாக்கிய ஏர் டெக்கான் உரிமையாளர்  ஜி.ஆர்.கோபிநாத் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. 

சூரரைப் போற்று

படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் அக்டோபர் மாதம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டனர். இந்நிலையில் புத்தாண்டை முன்னிட்டு இந்த படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. சூர்யாவின் முகத்தில் சிட்டுக்குருவி பறப்பது போல இருக்கும் இந்த போஸ்டர், வெளியான சில நிமிடங்களிலேயே சமூக வலைதளங்களில் வைரலானது. இப்படத்தின் டீசர் ஜனவரி 5 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.