சூர்யாவுக்கு எப்போதும் நன்றியுடன் இருப்பேன்: இயக்குநர் செல்வராகவன் ட்வீட் 

 

சூர்யாவுக்கு எப்போதும் நன்றியுடன் இருப்பேன்: இயக்குநர் செல்வராகவன் ட்வீட் 

இயக்குனர் செல்வராகவன் சூர்யாவுக்கு எப்போதும் நன்றியுடன் இருப்பேன் என்று பதிவு வெளியிட்டுள்ளார். 

சென்னை: இயக்குனர் செல்வராகவன் சூர்யாவுக்கு எப்போதும் நன்றியுடன் இருப்பேன் என்று பதிவு வெளியிட்டுள்ளார். 

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நடிப்பில் கடந்த 31ம் தேதி வெளியான படம் என்.ஜி.கே. ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாக பெரும் தோல்வியை தழுவியுள்ளது. 

ஆனால் படம் ரிலீஸான 7 நாட்களில் உலக அளவில் ரூ. 100 கோடி வசூலித்துவிட்டதாகக் கூறி சூர்யா ரசிகர்கள் ஹேஷ்டேக் எல்லாம் போட்டு ட்விட்டரை தெறிக்கவிட்டார்கள். 

இந்த நிலையில் இயக்குநர் செல்வராகவன் சூர்யா குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘என்.ஜி.கே. படத்தில் அருமையாக நடித்த சூர்யாவுக்கு நான் எப்பொழுதும் நன்றியுடன் இருப்பேன். அவர் ஓராண்டு காலமாக என்.ஜி.கே.வாகவே வாழ்ந்தார். அவர் எங்கள் அனைவருக்கும் ஆதரவாக இருந்தார். மிக்க நன்றி சார். நான் எப்பொழுதும் சொல்வது போன்று நீங்கள் இயக்குநர்களின் மனம் கவர்ந்தவர்’ என்று பதிவிட்டுள்ளார்.