சிவகார்த்திகேயனை அண்ணான்னு சொன்னது வருத்தம் தான்! | நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அதிரடி!

 

சிவகார்த்திகேயனை அண்ணான்னு சொன்னது வருத்தம் தான்! | நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அதிரடி!

என்ன தான் திறமையைக் காட்டினாலும், இந்தி பேசும் நடிகைகளுக்கு தான் வாய்ப்புகள் குவிகின்றன என்று பேசி சர்ச்சையைக் கிளப்பிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், அதன் பின்னர் தனது படத்தின் வெற்றிவிழா மேடையில், ‘இப்போதெல்லாம் ஓடாத படங்களுக்குத் தான் வெற்றி விழா நடத்துகிறார்கள்’ என்று பேசி மீண்டும் சர்ச்சையைக் கிளப்பினார்.

என்ன தான் திறமையைக் காட்டினாலும், இந்தி பேசும் நடிகைகளுக்கு தான் வாய்ப்புகள் குவிகின்றன என்று பேசி சர்ச்சையைக் கிளப்பிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், அதன் பின்னர் தனது படத்தின் வெற்றிவிழா மேடையில், ‘இப்போதெல்லாம் ஓடாத படங்களுக்குத் தான் வெற்றி விழா நடத்துகிறார்கள்’ என்று பேசி மீண்டும் சர்ச்சையைக் கிளப்பினார். தற்போது நிருபர்களுடனான சந்திப்பில், சிவகார்த்திகேயனை அண்ணான்னு சொல்றது எனக்கு வருத்தம் தான். ஜோடியா சேர்ந்து ஒரு படத்துல நடிச்சா இந்த வருத்தம் போய்விடும் என்று பேசி உருகியிருக்கிறார்.

aishwarya rajesh

ஐஸ்வர்யா ராஜேஷ், நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து, கனா படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நம்ம வீட்டு பிள்ளை என்ற படத்தில், சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நடித்துள்ளார். இதுகுறித்து நிருபர்கள் அவரிடம் கேள்விகள் கேட்டப்போது, அதற்கு பதிலளித்த ஐஸ்வர்யா ராஜேஷ், ‘அவர் மிக சின்ன வயதிலேயே 2 சிறுவர்களுக்கு அம்மாவாக நடித்ததாகவும், அதனால் தான் தனது வாழ்க்கையில், திருப்புமுனை ஏற்பட்டதாகவும், தான் தங்கையாக நடித்தது குறித்து வருத்தபடவில்லை என்றும் கூறியுள்ளார்.

aishwarya rajesh

மேலும் அவர் கூறுகையில், இனிவரும் படங்களில் சிவகார்த்திக்கேயன் மற்றும் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக நடித்தால் சரியாகிவிடும் என்றும், சிவகார்த்திக்கேயனை அண்ணா என்று அழைப்பது எனக்கு வருத்தம் தான் என்றும், படம் பார்த்தால் இந்த கேள்விகள் எழவே எழாது என தெரிவித்துள்ளார்.