சர்கார் திரைப்படத்தின் டீசர் வெளியானது! – விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்

 

சர்கார் திரைப்படத்தின் டீசர் வெளியானது! – விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்

விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் சர்கார் திரைப்படத்தின் முதல் டீசர் இன்று வெளியாகியுள்ளது.

சென்னை: விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் சர்கார் திரைப்படத்தின் முதல் டீசர் இன்று வெளியாகியுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்திருக்கும் திரைப்படம் சர்கார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையை அடுத்த தாம்பரம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் சமீபத்தில் நடைபெற்றது.

அதில் பேசிய நடிகர் விஜய், அரசியல் குறித்து பரபரப்பான கருத்துகளை பேசியிருந்தார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், சர்கார் திரைப்படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகியுள்ளது. 1 நிமிடம் 36 வினாடிகள் இருக்கும் அளவிற்கு டீசர் தயார் செய்யப்பட்டுள்ளது. டீசரை பார்த்த விஜய் ரசிகர்கள், ஆரவாரமாக கொண்டாடி வருகின்றனர்.