கரோனாவால் நின்ற மாநாடு படப்பிடிப்பு… சிம்புவைக் கலாய்த்தவர்களுக்கு தயாரிப்பாளர் கொடுத்த பதிலடி!

 

கரோனாவால் நின்ற மாநாடு படப்பிடிப்பு… சிம்புவைக் கலாய்த்தவர்களுக்கு தயாரிப்பாளர் கொடுத்த பதிலடி!

அதிக காலமாக கிடப்பில் இருந்த மாநாடு படப்பிடிப்பு, சில நாட்களுக்கு முன்புதான் துவங்கியது. இதனால் சிம்பு ரசிகர்கள் மத்தியில் உற்சாகம் ஏற்பட்டது. ஏற்கனவே சிம்பு ஷூட்டிங்கிற்கு குறித்த நேரத்தில் வருவதில்லை என சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர். இதையெல்லாம் கடந்து மாநாடு படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது.

கரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியா முழுவதும் பள்ளி, கல்லூரிகள், தியேட்டர்கள். மால்கள் என மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மார்ச் 31 வரை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டு வருகிறது. 

corona-89

அதிக காலமாக கிடப்பில் இருந்த மாநாடு படப்பிடிப்பு, சில நாட்களுக்கு முன்புதான் துவங்கியது. இதனால் சிம்பு ரசிகர்கள் மத்தியில் உற்சாகம் ஏற்பட்டது. ஏற்கனவே சிம்பு ஷூட்டிங்கிற்கு குறித்த நேரத்தில் வருவதில்லை என சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர். இதையெல்லாம் கடந்து மாநாடு படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது. தற்போது கரோனா பரவுதல் காரணமாக மீண்டும் மாநாடு படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதால், மீம்ஸ் கிரியேட்டர்கள் மறுபடியும் சிம்புவைக் கலாய்த்து வருகிறார்கள். 

manadu-shooting

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.  அதில் “கிரேன் விழுந்து எங்கள் சகோதரர்களை  இழந்ததையே எங்களால் இன்னமும் மறக்க இயலவில்லை. இந்தக் கொரணோவுக்கா இடம் கொடுப்போம்? இந்த Back up இல் ரொம்பவே வருந்தியவரும், உழைப்பாளிகளின் பாதுகாப்பு முக்கியம் எனக் கருதியவரும் எங்கள் #STR தான்.
மீண்டும் கெத்தா தொடங்கும் எங்கள் “மாநாடு”⁦ என்று தெரிவித்துள்ளார்.