ஒரு கோடி கொடுத்தா தெறம காட்டுறேன்… அதிர்ச்சி கொடுத்த பிரபல தமிழ் நடிகை!

 

ஒரு கோடி கொடுத்தா தெறம காட்டுறேன்… அதிர்ச்சி கொடுத்த பிரபல தமிழ் நடிகை!

தொலைகாட்சியில் நடன நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பிரபலமான அந்த ஐஸ் பொண்ணு சினிமாவில் நுழைந்து நடிகையானார். மேலும், இவர் நடிக்கும் படம்னா நம்பி போகலாம்பா என்ற இமேஜையும் உருவாக்கி வைத்துள்ளார்.

தொலைகாட்சியில் நடன நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பிரபலமான அந்த ஐஸ் பொண்ணு சினிமாவில் நுழைந்து நடிகையானார். மேலும், இவர் நடிக்கும் படம்னா நம்பி போகலாம்பா என்ற இமேஜையும் உருவாக்கி வைத்துள்ளார். பல ஹிட் படங்களில் நடித்துள்ள இந்த ஐஸ் நடிகையை அதிர்ஷ்டத்திற்காக பல படங்களில் தொடர்ந்து கமிட் செய்யும் இயக்குனர்கள் இன்றும் இருகிறார்கள். ஒரு படத்தில் நடிக்க கதாபத்திரத்திற்கு ஏற்றபடி 30 லட்சம் முதல் 50 லட்சம் வரை சம்பளமாக பெறுகிறார் நடிகை.

aishwarya rajesh

 தனது படங்கள் நல்ல கதையம்சம் இருப்பதால் தொடர்ந்து வெற்றி பெற்று வருவதை நடிகை தவறாகப் புரிந்துக் கொண்டு செய்கிற பந்தாவிற்கு அளவே இல்லை என்று கதறுகிறார்கள் கோடம்பாக்கத்தில். 
சமீபத்தில் ஒரு தயாரிப்பாளரிடம் ஒரு கோடி ரூபாய் சம்பளமாக கேட்டு அலற விட்டுள்ளார் நடிகை. படத்தின் ஹீரோவிற்கு இது தான் முதல் படம். வெளிநாட்டில் படித்து வந்த பிரபல நடிகரின் வாரிசான இவர் இப்போது தான் நடிக்க வந்துள்ளார். நடிகர் பெரிய இடத்து வாரிசு என்பதால் கேட்டதைக் கொடுப்பார்கள் என்று நினைத்து கேட்டாராம். ஆனாலும், கோடி ரூபாய் சம்பளம் கொடுக்க மனமில்லாமல் பேச்சுவார்த்தை நடத்தி ஒருவழியாக 75 லட்சம் ரூபாய் அவருக்கு சம்பளம் கொடுக்க முன் வந்துள்ளனர். காற்று உள்ள போதே தூற்றிக் கொள்ளும் நடிகையான இவர் வந்த வரை லாபம் என படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டாராம். மேலும், ஹீரோவின் குடும்பம் அம்மணிக்கு நெருங்கிய நண்பர்கள் என்பதும் கூடுதல் காரணமாம்.
கிடைக்கிற மேடைகளில் எல்லாம், ‘எனக்கு சம்பளம் முக்கியமில்லை… நல்ல தரமான கதை தான் முக்கியம்’ என்று முழங்கி வருகிற ஐஸ் நடிகை, இப்போது அடாவடியாய் கல்லா கட்டுவதை அதிர்ச்சியோடு பார்க்கிறது கோலிவுட்.