உடைந்தது நயன்தாரா – விக்னேஷ் சிவன் காதல்?

 

உடைந்தது  நயன்தாரா – விக்னேஷ் சிவன் காதல்?

நயன்தாராவுடன் கோயில்களுக்கு சென்று தரிசனம் செய்தார்   விக்னேஷ் சிவன். அதேபோல்  கிறிஸ்துமஸ் பண்டிகையையும் இருவரும் ஒன்றாக கொண்டாடினர். 

நடிகர்களின் ஆளுமை சூழ்ந்த சினிமா உலகில் ஒரு நடிகை நிலைத்து நிற்பதே ஆச்சரியம். ஆனால், தான் அறிமுகமான நாளிலிருந்து தற்போது வரை உச்ச இடத்திலேயே நிற்கிறார் நயன்தாரா. ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்படும் நயன்தாரா இயக்குநர்  விக்னேஷ் சிவனை உருகி உருகி காதலித்து வருகிறார்.அடிக்கடி வெளிநாடுகளுக்கு விசிட் அடிக்கும் இந்த ஜோடி, அங்கு எடுக்கப்படும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர். அப்படி சமீபத்தில்  மூக்குத்தி அம்மன் படப்பிடிப்பில் ஈடுபட்டிருக்கும் நயன்தாராவுடன் கோயில்களுக்கு சென்று தரிசனம் செய்தார்   விக்னேஷ் சிவன். அதேபோல்  கிறிஸ்துமஸ் பண்டிகையையும் இருவரும் ஒன்றாக கொண்டாடினர். 

ttn

இருப்பினும் புத்தாண்டு நிகழ்வில் நயன்தாரா புகைப்படம் மட்டுமே வெளியானது. ஜீ தமிழ் தொலைக்காட்சி நடத்திய விருது விழாவிலும் நயன்தாரா மட்டுமே கலந்து கொண்டார். இதனால் இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது என்றும்  நயன்தாரா மீதான மனக்கசப்பால் விக்னேஷ் சிவன் வரவில்லை என்றும் செய்திகள் வெளியானது.

 

ttn

இந்நிலையில் இதுகுறித்து பிரபல செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், இந்த தகவல்கள் இது முற்றிலும் பொய் என்றும் நயன்தாராவின் புத்தாண்டு கொண்டாட்டத்தில் விக்னேஷ் சிவன் உடனிருந்ததாகவும், அந்த புகைப்படத்தை எடுத்ததே விக்னேஷ் சிவன் தான் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.