இனி அம்மா வேடங்களில் நடிக்க மாட்டேன் – ஐஸ்வர்யா ராஜேஷ் திட்ட வட்டம்

 

இனி அம்மா வேடங்களில் நடிக்க மாட்டேன் – ஐஸ்வர்யா ராஜேஷ் திட்ட வட்டம்

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் தரமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ்,  தன்னை இயக்குநரின் நாயகி என்று கூறிக் கொள்ளும் ஐஸ்வர்யா, கதையின் நாயகியாகவே திகழ்கிறார். ‘காக்கா முட்டை’ படத்தில் வடசென்னை பெண்ணாக, இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடித்திருந்தார். வடசென்னை மக்களின் வாழ்க்கை முறை பற்றிய படத்தில்  ’பத்மா’ கதாபாத்திரத்தில் சிரமமே இல்லாமல் நடித்து பெயர் வாங்கி சென்றார். அதேபோல் கனா  படமும் ஐஸ்வர்யா ராஜேஷை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றது. இருப்பினும் சாமி 2, நம்ம வீட்டு பிள்ளை போன்ற படங்கள்  அவருக்கு சுமாராகவே அமைந்தது.குறிப்பாக  நம்ம வீட்டு பிள்ளை படத்தில் சிவகார்த்தியின் தங்கையாக நடித்திருந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ். 

Aishwarya rajesh

இந்நிலையில் சமீபத்தில் பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த ஐஸ்வர்யா ராஜேஷ், “இனி அம்மா வேடங்களில் நடிக்க மாட்டேன்.அம்மா வேடத்தில் நடிப்பதால் பிரபல நாயகர்கள் தம்முடன் நடிப்பதை தவிர்க்கின்றனர். அதுமட்டுமில்லாமல் வயது அதிகமாகி விட்டதாக ரசிகர்கள் நினைக்கின்றனர்” எனக் கூறினார்.