இந்தியன் 2 விபத்து எதிரொலி: ‘மாநாடு’ தொழிலாளர்களுக்கு ரூ. 30 கோடிக்கு இன்சூரன்ஸ்!

 

இந்தியன் 2 விபத்து எதிரொலி: ‘மாநாடு’ தொழிலாளர்களுக்கு  ரூ. 30 கோடிக்கு இன்சூரன்ஸ்!

இதுதொடர்பாக கிரேன்  ஆபரேட்டர் கைது  செய்யப்பட்டு பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். 

கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை அருகே உள்ள நாசரத்பேட்டை ஈ.வி.பி பிலிம் சிட்டியில் இந்தியன் 2 படப்பிடிப்பில் 3 பேர் கிரேன்  அறுந்து விழுந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

 

படப்பிடிப்பு தளத்தில், ஸ்டுடியோ லைட் வைக்கப்பட்டிருந்த கிரேன் ஒன்று அறுந்து விழுந்து இந்த விபத்து ஏற்பட்டது.

இதில்  கிரேனுக்கு அடியில் சிக்கி உதவி இயக்குநர் கிருஷ்ணா, தயாரிப்பு உதவியாளர்கள் மது மற்றும் சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்தனர்.  இதுதொடர்பாக கிரேன்  ஆபரேட்டர் கைது  செய்யப்பட்டு பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். 

ttn

இந்நிலையில் இந்தியன் 2 படப்பிடிப்பில் நடந்த விபத்தை கருத்தில் கொண்டு,  ‘மாநாடு’ படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அதில் பணிபுரியும் அனைத்து  தொழிலாளர்களுக்கும் ரூ 30 கோடிக்கு இன்சூரன்ஸ் செய்துள்ளார். இதற்காக அவர் 8 லட்ச ரூபாய் செலவு செய்துள்ளார். சூயஸ் காமாட்சியின் செயலை  அனைத்து தயாரிப்பாளர்களும் பாராட்டி வருவதோடு, இதேபோல் மற்றவர்களும் செய்யவேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.