இந்தியன் 2 படத்தில் நடிக்கிறேனா? பிரபல நடிகர் ஓபன் டாக்! 

 

இந்தியன் 2 படத்தில் நடிக்கிறேனா? பிரபல நடிகர் ஓபன் டாக்! 

இந்தியன் 2 படத்தில் தான் நடிக்கவில்லை என்று நடிகர் விவேக் அறிவித்துள்ளார்

சென்னை: இந்தியன் 2 படத்தில் தான் நடிக்கவில்லை என்று நடிகர் விவேக் அறிவித்துள்ளார்.

லைகா நிறுவனம் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகவிருக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் கமல்ஹாசனுடன் இணைந்து காஜல் அகர்வால், சித்தார்த் மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்தியன் 2 திரைப்படத்தில் நடிகர் விவேக் நடிக்கவிருப்பதாக தகவல்கள் பரவிவந்தன.அதை முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார் அதில்” இந்த படத்தின் கதைக்கு நான் தேவை என்றால் கண்டிப்பாக இயக்குனர் ஷங்கர் என்னை கூப்பிடுவார். அதுவரை வதந்திகள் வேண்டாம்’ என்று கூறியுள்ளார்.

vivek

மேலும் 1975ஆம் ஆண்டு ‘அபூர்வ ராகங்கள்’ வெளியான போது தான் சாந்தோம் பள்ளியில் படித்து கொண்டிருந்ததாகவும், அந்த காலத்தில் இருந்து தான் ஒரு கமல் ரசிகர் என்றும், அவருடன் நடித்தாலும், நடிக்காவிட்டாலும் அவருடைய படங்களை பார்க்க தவறுவதில்லை என்று அதில் பதிவிட்டுள்ளார்.