‘வலியை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை’ : இந்தியன் 2 விபத்து குறித்து லைகா நிறுவனம் இரங்கல்!
இந்த படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்து வருகிறது. அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.
ஷங்கர் இயக்கத்தில் மாபெரும் படைப்பாகத் தயாராகி வரும் இந்தியன் 2 படத்தில் கமல் ஹாசன், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சித்தார்த், விவேக் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்து வருகிறது. அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.
பிப்ரவரி 7 ஆம் தேதி முதல் செம்பரம்பாக்கத்தில் உள்ள பிலிம் சிட்டியில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு ஷூட்டிங் நடந்து வந்தது. இதையடுத்து நேற்றிரவு 9 மணியளவில் படப்பிடிப்பு தளத்தில், ஸ்டுடியோ லைட் வைக்கப்பட்டிருந்த கிரேன் ஒன்று அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.
இதில் கிரேனுக்கு அடியில் சிக்கி உதவி இயக்குநர் கிருஷ்ணா, தயாரிப்பு உதவியாளர்கள் மது மற்றும் சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
— Lyca Productions (@LycaProductions) February 19, 2020
இந்நிலையில் இதுகுறித்து லைகா புரொடக்ஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தாங்கள் உணரும் வலியை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. கடின உழைப்பாளிகள் மூவரை இழந்துவிட்டோம். விபத்தில் உயிரிழந்தவர்களை இழந்து வாழும் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்’ என்று கூறியுள்ளது.