இனிமேல் பாதுகாப்பை உறுதி செய்த பிறகு ஷூட்டிங்கை தொடங்குங்கள்: லைகா நிறுவனத்திற்கு கமல் ஹாசன் கடிதம்!

 

இனிமேல் பாதுகாப்பை உறுதி செய்த பிறகு ஷூட்டிங்கை  தொடங்குங்கள்: லைகா நிறுவனத்திற்கு கமல் ஹாசன் கடிதம்!

அஜாக்கிரதையாக நடந்து கொள்ளுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் லைகா நிறுவனம் மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை அருகே உள்ள நாசரத்பேட்டை ஈ.வி.பி பிலிம் சிட்டியில் இந்தியன் 2 படப்பிடிப்பில் 3 பேர் கிரேன்  அறுந்து விழுந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.  படப்பிடிப்பு தளத்தில், ஸ்டுடியோ லைட் வைக்கப்பட்டிருந்த கிரேன் ஒன்று அறுந்து விழுந்து இந்த விபத்து ஏற்பட்டது.

 

இதில்  கிரேனுக்கு அடியில் சிக்கி உதவி இயக்குநர் கிருஷ்ணா, தயாரிப்பு உதவியாளர்கள் மது மற்றும் சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்தனர்.  இந்த சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இதுதொடர்பாக கிரேன்  ஆபரேட்டர் கைது  செய்யப்பட்டு பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். 

 

அதேபோல் படத்தின்  தயாரிப்பாளரான லைகா நிறுவனம் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக படத்தின் இணை இயக்குநர் குமார் அளித்த புகாரின் பேரில் நசரத்பேட்டை போலீசார் அஜாக்கிரதையாக நடந்து கொள்ளுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் லைகா நிறுவனம் மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ttn

இந்நிலையில் நடிகர் கமல் ஹாசன் லைகா  நிறுவனத்திற்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், ‘ உங்கள் படத்தில் பணிபுரியும் கதாநாயகன் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் என்றும் இனிமேல் பாதுகாப்பு ஏற்பாடுகளை  உறுதி செய்த பிறகு படப்பிடிப்பைத் துவங்க வேண்டும்’ என்றும் கூறியுள்ளார் . 

yttn

மேலும்  விபத்து ஏற்படும் பட்சத்தில் அதற்கான முழு பொறுப்பையும் தயாரிப்பு நிறுவனம் ஏற்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளோடு லைகா நிறுவனத்திற்கு நடிகர் கமல் எழுதிய  அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.