கேரளாவில் லைகா புரொடக்ஷன்ஸ் திரைப்படங்கள் வெளியாவதில் சிக்கல்: ரஜினி படத்தால் நெருக்கடி!

 

கேரளாவில் லைகா புரொடக்ஷன்ஸ்  திரைப்படங்கள் வெளியாவதில் சிக்கல்:  ரஜினி படத்தால் நெருக்கடி!

 லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. இப்படம் வரும் 21 ஆம் தேதி முதல் திரைக்கு வரவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 

கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள மாஃபியா. பிரியா பவானி ஷங்கர், பிரசன்னா ஆகியோர் நடித்துள்ள  இந்த படத்துக்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். படத்தை  லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. இப்படம் வரும் 21 ஆம் தேதி முதல் திரைக்கு வரவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 

ttn

இந்நிலையில் மாஃபியா திரைப்படம் கேரளாவில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது லைகா  படத்தை கேரளாவில் இனி ரிலீஸ் செய்ய கூடாது என்று பாலக்காடு விநியோகஸ்தர்கள் சங்கத்தினர் முடிவெடுத்துள்ளனர்.

ttn

காரணம், தனுஷின் நண்பரும்  மினி ஸ்டுடியோ  நிறுவனருமான வினோத் குமார் லைகா நிறுவனத்திடமிருந்து காலா படத்தை வாங்கி கேரளாவில் ரிலீஸ் செய்துள்ளார். இதனால் வினோத் குமாருக்கு 5 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக கூறியுள்ளார். தர்பார் வெளியீட்டின்  போது  நடந்த இந்த பிரச்னையின் முடிவில் லைகா நிறுவனம் மினி ஸ்டுடியோவிற்கு 2 கோடி கோடி ரூபாய் அளித்துள்ளது. 

ttn

தற்போது லைகா புரொடக்ஷன்ஸின் மாஃபியா திரைப்படம் கேரளாவில் மீண்டும் வெளியாகவுள்ளதால் மினி ஸ்டுடியோ வினோத் குமார் காலா இழப்பீட்டிற்கான பாக்கி தொகையை தராவிட்டால் லைகா  படங்களை கேரளாவில் இனி ரிலீஸ் செய்ய விடமாட்டேன் என்று கூறி விநியோகஸ்தர்கள் சங்கத்தினர் மூலம் அழுத்தம் கொடுத்துள்ளது. இதனால் லைகா நிறுவனம் நீதிமன்றத்தை நாடியுள்ள நிலையில்  இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.