சம்பளம் தராத பிரபல இயக்குநர்… அடிக்கப் பாய்ந்த தொழிலாளர்கள்!

சம்பளம் தராத பிரபல இயக்குநர்… அடிக்கப் பாய்ந்த தொழிலாளர்கள்!

எம்.ஜி.ஆர் மகன் படத்தில் வேலை செய்த தொழிலாளர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு இயக்குநர் பொன் ராம் சம்பளம் வழங்காமல் அலைக்கழித்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீம ராஜா உள்ளிட்ட படங்களை இயக்கியவர் பொன் ராம். இவர் தற்போது எம்.ஜி.ஆர் மகன் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் இயக்குநர் சசிக்குமார், சத்யராஜ், பொன்வண்ணன், சமுத்திரக்கனி, மிருணாளினி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

எம்.ஜி.ஆர் மகன் படத்தில் வேலை செய்த தொழிலாளர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு இயக்குநர் பொன் ராம் சம்பளம் வழங்காமல் அலைக்கழித்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

pon

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீம ராஜா உள்ளிட்ட படங்களை இயக்கியவர் பொன் ராம். இவர் தற்போது எம்.ஜி.ஆர் மகன் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் இயக்குநர் சசிக்குமார், சத்யராஜ், பொன்வண்ணன், சமுத்திரக்கனி, மிருணாளினி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்த படத்தில் நடித்த நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், தொழிலாளர்களுக்கு இன்னும் சம்பளம் செட்டில் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. முதல் பிரதி என்ற அடிப்படையில் படத்தைத் தயாரித்ததாகவும், தயாரிப்பு நிறுவனம் பணம் இன்னும் வழங்கவில்லை என்றும் அனைவரிடமும் இயக்குநர் பொன் ராம் கூறி வந்துள்ளார்.

ponram

இந்த நிலையில் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடர்புகொண்ட தொழில்நுட்ப கலைஞர்கள், பேசியதைவிடக் கூடுதலாகவே பொன் ராமுக்கு செட்டில் செய்திருக்கும் தகவல் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து சம்பளத்தை செட்டில் செய்யும்படி மீண்டும் பொன் ராமை அணுகியுள்ளனர். விவரம் தெரியாத பொன் ராம், வழக்கம் போல இன்னும் பணம் செட்டில் ஆகவில்லை என்று கூறியுள்ளார். இதனால் கோபம் அடைந்த தொழிலாளர்கள் அவரை அடிக்கப் பாய்ந்ததாகக் கூறப்படுகிறது. அருகிலிருந்தவர்கள் தடுத்துக் காப்பாற்றி, சமாதானம் செய்ததாக கூறப்படுகிறது. பொன் ராமின் இந்த செயல் கோடம்பாக்கம் வட்டாரத்தை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.