கைத்தட்டி நன்றி சொன்ன மக்களை ஆபாச வார்த்தையால் அர்ச்சனை செய்த பிரபல இயக்குநர்!

 

கைத்தட்டி நன்றி சொன்ன மக்களை ஆபாச வார்த்தையால் அர்ச்சனை செய்த பிரபல இயக்குநர்!

மத்திய அரசு தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய 3 மவட்டங்களை 31 ஆம் தேதி வரை தனிமைப்படுத்த அறிவுறுத்தியுள்ளது. 

கொரோனா தொற்றை கட்டுபடுத்தும் நோக்கில் தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்களை தனிமைப்படுத்த மத்திய அரசு பரிந்துரைத்தது. அதிகபட்சமாக கேரளா மற்றும் மகாராஷ்ட்டிராவில் 10 மாவட்டங்களை தனிமைப்படுத்த கூறிய மத்திய அரசு தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய 3 மவட்டங்களை 31 ஆம் தேதி வரை தனிமைப்படுத்த அறிவுறுத்தியுள்ளது. 

இதனிடையே நேற்று மாலை 5 மணிக்கு தன்னலம் இன்றி பணியாற்றும்  மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், அரசு ஊழியர்கள், வருவாய் துறை, ஊடகத்துறையினர், அத்தியாவசிய விநியோகம் செய்வோர் உள்ளிட்டோருக்கு மக்கள் கைதட்டி, ஒலி எழுப்பி நன்றி தெரிவித்தனர். 

இந்நிலையில்  மக்களின் இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நெடுநல்வாடை படத்தின் இயக்குநர் செல்வ கண்ணன் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில்,  “முட்டாத் தாயொழிகளா! இன்னும் ஆயிரம் பேரு சேர்ந்து ஊர்வலமா போயி கை தட்டுங்கடா! ” என்று ஆவேசம் பொங்க பதிவிட்டுள்ளார். இந்த பதிவு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.