‘கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்’ சென்ஸாருக்கு தப்பினால் சென்னையோட இருட்டு உலகத்தை பார்க்கலாம்!?

 

‘கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்’ சென்ஸாருக்கு தப்பினால் சென்னையோட இருட்டு உலகத்தை பார்க்கலாம்!?

கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்’ என்ற பெயரில் இரண்டாவது படத்தையும் எடுத்திருக்கிறார். இந்தப் படம் சென்ஸாருக்கு தப்புமா என்பதே இப்போதைய கேள்வி!

‘அட்டக்கத்தி’ படம் தொடங்கி பல்வேறு படங்களைத் தயாரித்தவர் சி.வி.குமார். நிறைய இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்த அவர், ஏற்கனவே ‘மாயவன்’ படத்தின் மூலம் இயக்குனராகவும் களம் இறங்கினார். இப்போது ‘கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்’ என்ற பெயரில் இரண்டாவது படத்தையும் எடுத்திருக்கிறார். இந்தப் படம் சென்ஸாருக்கு தப்புமா என்பதே இப்போதைய கேள்வி!

ஜெயிலுக்குள்ளயே போதைப் பொருட்கள் தாராளமாக புழங்கும் போது, இவ்வளவு பெரிய சென்னையில் எவ்வளவு போதைப் பொருட்கள் புழங்குகிறது என்பது உங்களுக்கு தெரியுமா!? கஞ்சா, ஹெராயின், சரஸ் என்று ஆரம்பித்து சென்னையில் கிடைக்காத போதைப் பொருட்களே கிடையாது!

gangs of madras

போதை பழக்கத்திற்கு ஆளாகும் ஒரு இளம் ஜோடி எவ்வளவு சிக்கலுக்குள்ளாகிறார்கள் என்பதுதான் படத்தின் ஒன்லைன். அதன் பின்னணியில் இருக்கும் நிழல் உலக வாழ்க்கையை இதுவரை எந்த தமிழ் சினிமாவிலும் சொல்லாத அளவுக்கு டீடெய்லாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் சி.வி.குமார்.

உலக அளவில் ஹெராயின் கடத்தலில் சென்னைதான் முதலிடத்தில் இருக்கிறது என்கிற அதிர்ச்சியான தகவலையும் சொல்கிறார்! போலீஸ் அவ்வப்போது பிடிப்பதாக சொல்லப்படும் ஆட்கள் அப்பாவிகள். எங்கிருந்து வருகிறது, அதோட நெட்ஒர்க் எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்பதெல்லாம் படு ரகசியமாக வைத்திருக்கிறார்கள்.

gangs of madras

அதையெல்லாம் இந்தப் படத்தில் டீடெய்லாக சொல்லியிருக்கிறாராம். இயக்குனர் சி.வி.குமார் மேல்தட்டு ஆட்களில் பலர் நெருக்கமான நண்பர்கள் வட்டத்தில் இருக்கிறார்கள்.அப்படி நெருக்கமான ஆட்களுக்கு நடந்த உண்மைச் சம்பவத்தின் பின்னணியை வைத்து இந்தக் கதையை பண்ணியிருக்கிறார்.

படம் வரும் போது சர்சைகளுக்கு பஞ்சமிருக்காது! ரொம்பவும் டீட்டெயிலா பண்ணினால் சென்ஸார் ஆட்கள் வெளியிட  எப்படி அனுமதி கொடுப்பார்கள் என்கிற கேள்வியும் இருக்கிறது!