அக்டோபர் 31 வரை சினிமா தியேட்டர்கள் மூடல் – இலங்கையில் கொரோனா நடவடிக்கை

அக்டோபர் 31 வரை சினிமா தியேட்டர்கள் மூடல் – இலங்கையில் கொரோனா நடவடிக்கை

கொரோனா நோய்த் தொற்று பரவத் தொடங்கியதுமே சில நாடுகள் மிகுந்த முன்னெச்சரிக்கையோடு தங்களைத் தற்காத்துக்கொண்டன. அவற்றில் ஒன்று இலங்கை.

இலங்கையில் தற்போது மொத்த பாதிப்பு 5,219. இவர்களில் 3380 பேர் குணமடைந்துவிட்டனர். 13 பேர் மரணம் அடைந்துவிட்டனர்.

அக்டோபர் 31 வரை சினிமா தியேட்டர்கள் மூடல் – இலங்கையில் கொரோனா நடவடிக்கை

இலங்கையில் கட்டுக்குள் இருந்த கொரோனா தொற்று சமீப சில நாட்களாக அதிகரித்து வருகிறது. அக்டோபர் 6-ம் தேதி மட்டுமே 739 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டனர். இதுவே இலங்கையில் ஒரே நாளில் அதிகமளவில் அதிகரித்த எண்ணிக்கை.

20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நோய்த் தொற்று பரவியிருப்பதால் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது இலங்கை அரசு. கொழும்பின் முக்கிய சந்தை மூடப்பட்டுள்ளது.

அக்டோபர் 31 வரை சினிமா தியேட்டர்கள் மூடல் – இலங்கையில் கொரோனா நடவடிக்கை

இந்நிலையில் இலங்கையில் உள்ள சினிமா தியேட்டர்கள் அக்டோபர் மாதம் 31-ம் தேதி வரை மூடப்படுவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக இது மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கிறார்கள்.