ஓடும் லாரியில் சினிமா பாணியில் பெயிண்ட் திருட்டு… 7 பேர் கும்பல் கைது…

 

ஓடும் லாரியில் சினிமா பாணியில் பெயிண்ட் திருட்டு… 7 பேர் கும்பல் கைது…

திண்டுக்கல்

நிலக்கோட்டை அருகே ஓடும் லாரியில் சினிமா பாணியில் பெயிண்ட் பெட்டிகளை திருடிய 7 பேர் கும்பலை போலீசார் அதிரடியாக துரத்திப்பிடித்தனர்.

கோவையில் இருந்து மதுரைக்கு பெயிண்ட பெட்டிகளை ஏற்றிக் கொண்டு நேற்று லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. கோவையை சேர்ந்த சங்கர் கணேஷ் என்பவர் லாரியை ஓட்டிச் சென்றார். திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே சென்றபோது, லாரியை ஆம்னி வேனில் பின் தொடர்ந்து வந்த மர்மகும்பல் ஒன்று, ஓடும் லாரியில் ஏறி அதில் இருந்த பெயிண்ட் பெட்டிகளை திருடியது.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ஓட்டுநர், லாரியை நிறுத்திய நிலையில், அந்த கும்பல் கத்தியைக்காட்டி மிரட்டி சங்கர் கணேஷை, விரட்டி அடித்தது. தொடர்ந்து, பெயிண்ட் பெட்டிகளை திருடிக்கொண்டு ஆம்னி வேனில் தப்பிசென்றனர். இதுகுறித்து, சங்கர் கணேஷ் அருகில் இருந்த காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

ஓடும் லாரியில் சினிமா பாணியில் பெயிண்ட் திருட்டு… 7 பேர் கும்பல் கைது…

அதன் பேரில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த நிலக்கோட்டை உதவி ஆய்வாளர் கிருஷ்ணகுமார் தலைமையிலான போலீசார், ஆம்னி வேனில் தப்பிய 7 பேர் கும்பலை துரத்திச் சென்று அதிரடியாக கைதுசெய்தனர். விசாரணையில் அவர்கள், திண்டுக்கல்லை சேர்ந்த விக்னேஸ்வரன்(31), பரதன் (28), நாகஅர்ஜுன் (21), நாகமலை (20), வீரமணி (21), விஜயகுமார் (21) மற்றும் கேப்டன் பிரபாகரன் (24) ஆகியோர் என்பது தெரிய வந்தது.

அவர்களிடமிருந்து சுமார் 13 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 8 பெயிண்ட் பெட்டிகள் மற்றும் திருட்டுக்கு பயன்படுத்திய ஆம்னிவேன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, 7 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.