19ம் தேதியில் இருந்து சின்னத்திரை படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரோடக்‌ஷன் பணி நிறுத்தம்!

 

19ம் தேதியில் இருந்து சின்னத்திரை படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரோடக்‌ஷன் பணி நிறுத்தம்!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், மக்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. மக்கள் பணிக்கு செல்ல இயலாததால், பல தொழில் நிறுவனங்கள் முடங்கின. குறிப்பாக அமைப்பு சாரா தொழிலாளர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். அந்த வகையில் திரைத்துறையும் முடங்கியதால், அதனை சார்ந்த தொழிலாளர்களின் நிலை கேள்விக் குறியானது. இந்த இக்கட்டான சூழலில் அவர்களுக்கு நடிகர்களும், நடிகைகளும் நிதியுதவி அளித்தனர். முக்கியமாக கொரோனா அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கால் கடந்த 70 நாட்களுக்கு மேலாக சின்னத்திரை படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. ஊரடங்கிலிருந்து தமிழக அரசு அன்லாக் 1 என்ற தளர்வு அளிக்கப்பட்டதையடுத்து கடந்த 8 ஆம் தேதி முதல் சின்னத்திரை படப்பிடிப்புகள் மற்றும் போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் தொடங்கி நடைபெற்றுவந்தன.

19ம் தேதியில் இருந்து சின்னத்திரை படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரோடக்‌ஷன் பணி நிறுத்தம்!

இந்நிலையில் தமிழக அரசு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு மீண்டும் முழு பொது முடக்கம் அறிவித்துள்ளதால் வரும் 19ம் தேதியில் இருந்து சின்னத்திரை படப்பிடிப்புகள் மற்றும் சினிமாவுக்கான போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் என அனைத்தையும் நிறுத்த பெப்ஸி அறிவுறுத்தியுள்ளது