“உடனே சினிமா படப்பிடிப்பை தொடங்கலாம்”.. வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு!

 

“உடனே சினிமா படப்பிடிப்பை தொடங்கலாம்”.. வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வதால், மக்கள் அதிகமாக கூடும் இடங்கள் அனைத்தும் மூடப்பட்டன. அதே போல, கூட்டத்தை கட்டுப்படுத்தும் பொருட்டு சினிமா படப்பிடிப்புகளுக்கும், தியேட்டர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. கிட்டத்தட்ட 4 மாதங்களுக்கு மேலாக படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், சமீபத்தில் சின்னத்திரை படப்பிடிப்புக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது, சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், திரைப்பட தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் விரைவில் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி தர வேண்டும் என கோரிக்கைகள் எழுந்த வண்ணம் இருந்தன.

“உடனே சினிமா படப்பிடிப்பை தொடங்கலாம்”.. வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு!

இந்த நிலையில் சினிமா படப்பிடிப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய செய்தி ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா தடுப்பு நடவடிக்கையை பின்பற்றினால் உடனே சினிமா படப்பிடிப்பை தொடங்கலாம் என்றும் குறைந்த அளவு பணியாளர்களை கொண்டு ஷூட்டிங் நடத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

அதே போல, கேமரா முன் நடிப்பவர்களை தவிர மற்ற அனைவரும் மாஸ்க் போட வேண்டும், ஷூட்டிங்கில் சுமார் 6 அடி இடைவெளியை பின்பற்ற வேண்டும், ஒப்பனை கலைஞர்கள் அனைவரும் கவச உடை அணிந்து தான் பணியாற்ற வேண்டும், மாஸ்க் அணிந்து அடிக்கடி கை கழுவ வேண்டும், உடை உள்ளிட்ட ஒப்பனை பொருட்கள் பகிர்ந்து கொள்வதை தவிர்க்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.மேலும், ஷூட்டிங்கில் பார்வையாளர்களை அனுமதிக்க கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.