நிதி நிறுவன மோசடி வழக்கு… ஞானவேல் ராஜா உள்ளிட்ட மூன்று பிரபல சினிமா தயாரிப்பாளர்களுக்கு சம்மன்

 

நிதி நிறுவன மோசடி வழக்கு… ஞானவேல் ராஜா உள்ளிட்ட மூன்று பிரபல சினிமா தயாரிப்பாளர்களுக்கு சம்மன்

ராமநாதபுரத்தில் நிதி நிறுவனம் நடத்தி பல கோடி மோசடியில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில் விசாரணைக்கு ஆஜராகும்படி ஞானவேல் ராஜா உள்ளிட்ட மூன்று பிரபல திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
சென்னையைச் சேர்ந்த நீதிமணி, ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஆனந்த் ஆகியோர் அரசுப் பள்ளி ஆசிரியர்களைக் குறிவைத்து நிதி நிறுவனம் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக நீதிமணி, ஆனந்த் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். நீதிமணியிடம் நடத்த விசாரணையில் ரூ.140 கோடி அளவுக்கு நிதி வசூல் செய்ததாகவும், அந்த பணத்தை மூன்று திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு வட்டிக்கு கொடுத்ததாகவும், அவர்கள் திருப்பித் தராமல் ஏமாற்றிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

நிதி நிறுவன மோசடி வழக்கு… ஞானவேல் ராஜா உள்ளிட்ட மூன்று பிரபல சினிமா தயாரிப்பாளர்களுக்கு சம்மன்
நீதிமணி அளித்த வாக்குமூலம் அடிப்படையில் சென்னை டி.நகரைச் சேர்ந்த ஞானவேல்ராஜா, சேலத்தைச் சேர்ந்த சிவா, சென்னை கே.கே நகர் பகுதியைச் சேர்ந்த முருகானந்தம் ஆகியோருக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இவர்கள் மூன்று பேரும் பிரபல திரைப்பட தயாரிப்பாளர்கள் ஆவர். ஞானவேல் ராஜா நடிகர் சூர்யா, கார்த்தி நடித்த படங்கள் உள்பட பல்வேறு படங்களைத் தயாரித்தவர். இந்த மூன்று பேரும் வருகிற 20ம் தேதி முதல் 23ம் தேதிக்குள் ஆஜராக வேண்டும் என்று போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

நிதி நிறுவன மோசடி வழக்கு… ஞானவேல் ராஜா உள்ளிட்ட மூன்று பிரபல சினிமா தயாரிப்பாளர்களுக்கு சம்மன்ஆனந்த் அளித்த வாக்குமூலத்தில் சில ஊடக பிரபலங்கள், அரசியல் கட்சிப் பிரமுகர்களுக்கு கடன் கொடுத்திருப்பது தெரியவந்துள்ளது. அவர்களிடமும் விசாரணை நடத்த ராமநாதபுரம் போலீசார் திட்டமிட்டுள்ளனர். பல கோடி ரூபாய் நிதி மோசடியில் யாரையும் விடாமல் விசாரணை நடத்தி பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்துள்ளனர்.
ராமநாதபுரம் நிதி நிறுவன மோசடி வழக்கில் பிரபல திரைப்படத் தயாரிப்பாளர்கள், அரசியல்வாதிகள், ஊடக பிரமுகர்கள் சிக்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.