மகள்களை காணாமல் தந்தை திண்டாட்டம் -அவர்கள் கைலாஸாவில் நித்யானந்தாவுடன் இசை கொண்டாட்டம்..

 

மகள்களை காணாமல் தந்தை திண்டாட்டம் -அவர்கள் கைலாஸாவில் நித்யானந்தாவுடன் இசை கொண்டாட்டம்..

அகமதாபாத்தில் உள்ள ஹதிஜானில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமத்திலிருந்து காணாமல் போனதாக அவரின் தந்தை மூலம் புகார் அளிக்கப்பட்ட சகோதரிகள், இப்போது கைலாஸா தீவில் ‘சட்னி’ இசை உட்பட பல கலைகளில் தேர்ச்சி பெற்று வருகின்றனர். சட்னி இசை என்பது இந்திய-கரீபியன் சமூகத்தில் பிரபலமான ஒரு இசை.

மகள்களை காணாமல் தந்தை திண்டாட்டம் -அவர்கள் கைலாஸாவில் நித்யானந்தாவுடன் இசை கொண்டாட்டம்..நித்யானந்தா இருக்கும் இடம் மர்மமாக மாறிய நேரத்தில், 2019 நவம்பரில், குஜராத் உயர்நீதிமன்றத்தில் அவர்களின் தந்தையால் ஒரு ஹேபியாஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மகள்களை காணாமல் தந்தை திண்டாட்டம் -அவர்கள் கைலாஸாவில் நித்யானந்தாவுடன் இசை கொண்டாட்டம்..தமிழகத்தைச் சேர்ந்த அவர்களின் தந்தை , தனது இரண்டு மகள்களும் நித்யானந்தாவின் ஹதிஜன் ஆசிரமத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டி அகமதாபாத் போலீசில் முன்பு புகார் அளித்திருந்தார். பின்னர் இரண்டு பெண்களும் போலீசாரால் மீட்கப்பட்டு தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டனர். இப்போது அவர்கள் நித்யானந்தாவின் கைலாஸா தீவில் ‘சட்னி’ இசை உட்பட பல கலைகளில் தேர்ச்சி பெற்று வருகின்றனர்.

மகள்களை காணாமல் தந்தை திண்டாட்டம் -அவர்கள் கைலாஸாவில் நித்யானந்தாவுடன் இசை கொண்டாட்டம்..இரண்டு சகோதரிகளில் மூத்தவருக்கு கைலாசாவில் கலாச்சார ஞானம் அதிகம் என்று போலீசார் தெரிவித்தனர்.”கைலாசா தீவினில் அந்த சகோதரிகள் பல்வேறு நிகழ்ச்சிகளை நிகழ்த்துவதை நாங்கள் அறிந்திருக்கிறோம்” என்று காவல்துறை அதிகாரி கூறினார். சகோதரிகளின் இசை வாழ்க்கைக்கும் அவர்களின் தந்தையின் கூற்றுக்கும் இடையே கருத்து வேறுபாடு உள்ளது.
“நித்யானந்தாவுக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்குவதில் நாங்கள் இன்னும் வெற்றிபெறவில்லை” என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறினார். “நாங்கள் சகோதரிகளை மீண்டும் அழைத்து வர முடியாது, ஏனென்றால் இந்தியாவுடன் எந்த நாட்டின் ஒப்பந்தத்தை செயல்படுத்த முடியும் என்பது தெளிவாக இல்லை.”என்று அந்த போலீஸ் அதிகாரி மேலும் கூறினார் .