#Chowkidar பாஜக-வினர்; மோடி பாபாவும்…40 திருடர்களும்…-காங்கிரஸ் தாக்கு!

 

#Chowkidar பாஜக-வினர்; மோடி பாபாவும்…40 திருடர்களும்…-காங்கிரஸ் தாக்கு!

பாஜக-வின் #Chowkidar பிரசாரம் நாட்டு மக்களை ஏமாற்றும் வேலை என காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜீவாலா விமர்சித்துள்ளார்

புதுதில்லி: பாஜக-வின் #Chowkidar பிரசாரம் நாட்டு மக்களை ஏமாற்றும் வேலை என காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜீவாலா விமர்சித்துள்ளார்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் மே 23-ம் தேதி வெளியாகிறது. மக்களவை தேர்தலை எதிர்கொள்ள தேசிய மற்றும் மாநில கட்சிகள் பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகின்றனர்.

அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடி, தனது டிவிட்டர் பக்கத்தில், ‘நானும் காவலாளிதான் (#Chowkidar)’ என்கின்ற புதிய பிரசார வீடியோவை வெளியிட்டார். அதில், ‘உங்கள் காவலாளி தேசத்துடன் துணை நிற்கிறார். ஆனால், நான் தனி ஆள் கிடையாது. யாரெல்லாம் ஊழலை, சமூகக் கொடுமைகளை எதிர்த்துப் போராடுகிறார்களோ அவர்கள் எல்லாம் காவலாளிகள்தான். இந்தியாவின் வளர்ச்சிக்காக போராடும் ஒவ்வொருவரும் காவலாளிதான். இன்று அனைத்து இந்தியர்களும் ‘நானும் காவலாளிதான்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

chowkidar

தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் ‘காவலாளி நரேந்திர மோடி (Chowkidar Narendra Modi)’ என தனது கணக்கின் பெயரை மாற்றினார். இதையடுத்து, பாஜகவினர் அனைவரும் தங்களது பெயருக்கு முன்னால் Chowkidar (காவலன்) என்ற அடைமொழியை சேர்த்துள்ளனர்.

இந்நிலையில், பாஜக-வின் #Chowkidar பிரசாரம் நாட்டு மக்களை ஏமாற்றும் வேலை என காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜீவாலா விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தங்களது தோல்விகளை மறைத்து, நாட்டு மக்களை ஏமாற்றுவதற்காக மோடி பாபாவும் அவரது 40 திருடர்களும் Chowkidar என்ற அடைமொழியை பெயருக்கு பின்னால் சேர்த்துள்ளனர்.

வங்கிகளில் கடன் பெற்று மோசடி செய்து, விஜய் மல்லையா, நிரவ் மோடி உள்ளிட்டோர் நாட்டை விட்டு தப்பித்து ஓட வழிவகை செய்த பிரதமர் மோடி Chowkidar (காவலன்) தான். திருடர்களுக்கான காவலன் என்று தெரிவித்தார்.

randeep

திருடர்களின் காவலளர்கள் ரஃபேல் ஒப்பந்தத்தில் ரூ.3000 கோடியை திருடியுள்ளனர். அமித்ஷாவின் மகன் ஜெய்ஷாவின் வருமானத்தை ரூ.80 கொடியாக அதிகரிக்க உதவி புரிந்துள்ளனர். கடந்த ஐந்து ஆண்டுகளில் இளைஞர்களின் வேலைவாய்ப்புகளை, சிறு, குறு தொழிலதிபர்களின் தொழில்களை இந்த #Chowkidar -கள் திருடியுள்ளனர் எனவும் சுர்ஜீவாலா சாடியுள்ளார்.