வேளாண் சட்டத்தில் திருத்தம்…. சரத் பவாரை ஆதாரத்துடன் விவசாயிகளிடம் கோர்த்து விட்ட சிவ்ராஜ் சிங் சவுகான்

வேளாண் சட்டத்தில் திருத்தம்…. சரத் பவாரை ஆதாரத்துடன் விவசாயிகளிடம் கோர்த்து விட்ட சிவ்ராஜ் சிங் சவுகான்

வேளாண் துறையில் தனியார் முதலீட்டை ஊக்குவிக்க சட்டத்தில் திருத்த செய்வது அவசியம் என்று முதலில் கூறியதே தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார்தான் என்று ஆதாரத்துடன் மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் நேற்று ஹைதராபாத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவசாயிகளை தவறாக வழிநடத்தி தனது மூழ்கும் படகை காப்பாற்ற முயற்சி செய்கிறது. வேளாண் சட்டங்கள் குறித்து காங்கிரஸ், தி.மு.க., ஆம் ஆத்மி, எஸ்.பி., அகாலிதளம், திரிணாமுல் காங்கிரஸ், இடது சாரிகள் உள்பட பிற அரசியல் கட்சிகளின் பாசாங்குத்தனத்தை அம்பலப்படுத்துவேன்.

வேளாண் சட்டத்தில் திருத்தம்…. சரத் பவாரை ஆதாரத்துடன் விவசாயிகளிடம் கோர்த்து விட்ட சிவ்ராஜ் சிங் சவுகான்
மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான்

2011ம் ஆண்டில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மத்திய வேளாண் துறை அமைச்சராக இருந்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், தனியார் முதலீட்டை ஊக்குவிக்க மத்திய பிரதேச ஏ.பி.எம்.சி. சட்டத்தில் திருத்தம் செய்வது அவசியம் என்று எனக்கு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில் விவசாயிகள், நுகர்வோர் மற்றும் வேளாண் வர்த்தகத்தின் ஒட்டு மொத்த நன்மைக்காக, சந்தைப்படுத்துல், உள்கட்டமைப்பு மற்றும் போட்டி சந்தைப்படுத்துதல் வாய்ப்புகளை வழங்குவதில் தனியார் துறை முதலீட்டை ஊக்குவிக்க விவசாய உற்பத்தி சந்தை குழு (ஏ.பி.எம்.சி.) சட்டத்தில் திருத்தங்கள் செய்வது அவசியம் என்று சரத் பவார் எழுதி இருந்தார்.

வேளாண் சட்டத்தில் திருத்தம்…. சரத் பவாரை ஆதாரத்துடன் விவசாயிகளிடம் கோர்த்து விட்ட சிவ்ராஜ் சிங் சவுகான்
காங்கிரஸ்

மத்திய அரசு விவசாயிகளுடன் நிற்கிறது. அவர்களின் சந்தேகங்களை தெளிவுப்படுத்துவதோடு விரைவில் அவர்களின் பிரச்சினைகளையும் மத்திய அரசு தீர்க்கும். விவசாயிகளின் போராட்டத்தின் போர்வையில் நாட்டில் குழப்பத்தை உருவாக்க முயற்சிக்கும் நபர்களை அராசங்கம் விட்டு விடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.