தமிழகத்தில் பரவும் காலரா : ஒருவர் உயிரிழப்பு!

 

தமிழகத்தில் பரவும் காலரா : ஒருவர் உயிரிழப்பு!

தமிழகத்தில் காலராவுக்கு ஒருவர் பலியாகி இருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திம்மலை கிராமத்தில் கண்ணன்(60) என்பவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு உடல்நிலை மோசமாகியுள்ளது. இதையடுத்து அவரை அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவருக்கு காலரா என்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து மருத்துவமனையில் கண்ணனுக்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தமிழகத்தில் பரவும் காலரா : ஒருவர் உயிரிழப்பு!

இதை தொடர்ந்து அப்பகுதியில் வாந்தி, மயக்கம் ஏற்பட்ட 40க்கும் மேற்பட்டோர் அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் பரவும் காலரா : ஒருவர் உயிரிழப்பு!

விபிரியோ காலரே (Vibrio cholerae) எனப்படும் பாக்டீரியாவினால் உண்டாகும் சிறுகுடலில் பாதிப்பை ஏற்படுத்தும் தொற்று காலரா என்று அழைக்கப்படுகிறது. இந்த பாக்டீரியாவைக் கொண்ட உணவு அல்லது நீரை அருந்துவதன் மூலம் இந்நோய் மனிதருக்குத் தொற்றுகிறது. காலரா நோயினால் பாதிக்கப்பட்டோர் தொடர்ச்சியான வாந்தி, வயிற்று போக்கினால் அவதிப்படுவர். ஒருகட்டத்தில் அதீத வயிற்றுப் போக்கு காரணமாக நீரிழப்பு ஏற்பட்டு உயிரிழப்பு நிகழ்கிறது.