‘339 கிலோ எடையில்’ பாடகர் எஸ்.பி.பிக்கு சாக்லேட் சிலை!

 

‘339 கிலோ எடையில்’ பாடகர் எஸ்.பி.பிக்கு சாக்லேட் சிலை!

புதுச்சேரியில் மறைந்த பாடகர் எஸ்.பி.பிக்கு சாக்லேட் சிலை வைக்கப்பட்டிருப்பது வைரலாகி வருகிறது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல பாடகர் எஸ்.பிபி கடந்த செப்.25 விண்ணுலகை அடைந்தார். கிட்டத்தட்ட 40 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடி, மக்கள் மனதில் கால் பதித்த எஸ்.பி.பியின் இழப்பு, இசைத்துறையில் பேரிழப்பாக கருதப்படுகிறது. அவர் நம்மை விட்டு சென்றாலும், அவரது பாடல்கள் என்றென்றும் ஒலித்துக் கொண்டே இருக்கும் என ரசிகர்கள் தங்களை தேற்றிக் கொண்டனர். இருப்பினும், அவரை நினைவு கூறும் வகையில் பல இடங்களில் சிலைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

‘339 கிலோ எடையில்’ பாடகர் எஸ்.பி.பிக்கு சாக்லேட் சிலை!

இந்த நிலையில், புதுச்சேரியில் இருக்கும் ‘சூகா’ என்ற சாக்லெட் கடையில் எஸ்.பி.பியின் சாக்லேட் சிலை வைக்கப்பட்டிருப்பது மக்களால் வெகுவாக கவரப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அங்கு பிரபலங்களின் சிலை வைக்கப்படும் நிலையில் இந்த முறை எஸ்.பி.பியின் சாக்லெட் சிலை வைக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 339 கிலோ எடையில் 5.8 அடி உயரத்தில் அந்த சிலை அமைக்கப்பட்டிருப்பதாக அந்த கடையின் உரிமையாளர் தெரிவித்திருக்கிறார். தத்ரூபமாக சாக்லெட்டில் செய்யப்பட்டிருக்கும் இந்த சிலை தற்போது வைரலாகி வருகிறது.

‘339 கிலோ எடையில்’ பாடகர் எஸ்.பி.பிக்கு சாக்லேட் சிலை!

முன்னதாக அந்த அபிநந்தன், அப்துல்கலாம், சச்சின் டெண்டுல்கர், ரஜினிகாந்த் உள்ளிட்ட 12 பிரபலங்களின் புகைப்படம் வைக்கப்பட்டிருந்ததாக தெரிகிறது. இந்த சிலை வரும் ஜன.10ம் தேதி வரையில் மக்களின் பார்வைக்கு வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.