சாக்லேட், பேக்கரி பண்டங்களால் பல் சொத்தை அபாயம்!

பற்களில் ஏற்படும் பாதிப்புகளில் முக்கியமானது சொத்தை. இந்த பாதிப்பு குழந்தைகள், இளம் வயதினர், முதியோர் என அனைத்து தரப்பினருக்கும் வரக்கூடிய ஒன்று. பல் சொத்தை ஏற்படுவதற்கு இதுதான் காரணம் என்று உறுதியாகச் சொல்ல முடியாது என்றாலும் இனிப்புகளை அதிகமாக விரும்பிச் சாப்பிடுவது முதன்மையான காரணமாக இருக்கின்றது.

பேக்கரி:
எண்பது, தொண்ணூறுகளில் ஜவ்வு மிட்டாய் விற்பார்கள். அதை வாயில் போட்டதும் பற்களில் ஒட்டிக்கொள்ளும். இதை பலரும் விரும்பிச் சாப்பிட்டதால் சொத்தைப்பற்களுடன் அவதிப்பட்ட பலர் உண்டு. இதேபோல் பற்களில் அதிகம் ஒட்டக்கூடிய மாவுப்பொருள் நிறைந்த மிட்டாய்கள், குச்சி ஐஸ், கடலை மிட்டாய், சாக்லேட்டுகள் மற்றும் பேக்கரிகளில் தயாராகும் சர்க்கரைப்பொருள் அதிகம் உள்ள பண்டங்களைச் சாப்பிடுவதாலும் பல் சொத்தை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

பொதுவாக, குழந்தைப்பருவத்தில் இதுபோன்ற இனிப்புகளைச் சாப்பிட்டதும் வாயைச் சுத்தம் செய்வது கிடையாது. சில நேரங்களில் பல குழந்தைகள் இனிப்புகளைச் சாப்பிட்டபடியே தூங்கிவிடுவார்கள். இப்படி தூங்கும்போது வாயில் உள்ள பாக்டீரியாக்கள் பற்களின் இடுக்குகளில் ஒட்டிக்கொண்டிருக்கும் சர்க்கரைப் பொருள்களுடன் வேதிவினை புரிந்து லாக்டிக் என்ற அமிலத்தைச் சுரக்கும். இப்படி அவ்வப்போது நடக்கும்போது இந்த அமிலம் அடிக்கடி சுரந்து கொஞ்சம் கொஞ்சமாக பற்களில் உள்ள எனாமலை அரித்து பற்களைச் சிதைத்துவிடும். காலப்போக்கில் பற்கள் சொத்தையாகி பலமிழந்துவிடும்.


புட்டிப்பால்:
சிறுவயதில் பால் குடிக்கும் குழந்தைகள் குறிப்பாக புட்டிப்பாலை குடிக்கும் குழந்தைகள் அப்படியே உறங்கிவிடுவார்கள். இந்த நிலை தொடரும்பட்சத்தில் பற்களின்மேல் பாலும் இனிப்பும் ஒட்டிக்கொண்டு சொத்தை உண்டாகக் காரணமாகவிடும். சில குழந்தைகளுக்கு பரம்பரை காரணமாகவும் பற்களில் சொத்தை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

வளர்ந்து பெரியவர்களான பிறகும்கூட சிலர் இதேபோல் இனிப்புகளைச் சாப்பிட்டு வாயை சுத்தம் செய்யாமலிருப்பதால் அவர்களுக்கும் இதே நிலை ஏற்படும். ஆனால், பெரியவர்களில் டீ, காபி போன்றவற்றை அருந்திவிட்டு வாயைக் கழுவுவது இல்லை. மேலும், புகைப்பிடித்தல் மற்றும் பாக்கு போடுவது உள்ளிட்ட சில கெட்ட பழக்க வழக்கங்களால் அவர்களது பற்களில் காரை படிந்து பாதிப்பு ஏற்படுத்தும். காரை படிந்த பற்களில் மிக எளிதாக பாக்டீரியாக்கள் வளரத்தொடங்கும். இவை பல்கிப்பெருகுவதால் நாளடைவில் பற்களில் சொத்தை விழுந்து பற்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும்.


பல் பாதுகாப்பு:
எது எப்படியோ பற்களில் ஏற்படும் இந்த பாதிப்புகளுக்கு இன்றைக்கு நவீன சிகிச்சைகள் வந்துவிட்டன. முன்பைப்போல அல்லாமல் இன்றைக்கு தெருவுக்கு தெரு பல் மருத்துவர்களைக் காண முடிகிறது. பற்களில் சொத்தை ஏற்பட்டால் தாமதிக்காமல் பல் மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை எடுத்துக்கொண்டால் பிரச்சினை பெரிதாகாமல் பார்த்துக் கொள்ளலாம். பல் போனால் சொல் போச்சு என்பார்கள். ஆகவே, பற்களில் ஏற்படும் பாதிப்பை சரிசெய்ய வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும்.

Most Popular

உங்கள் குழந்தையை ஸ்கூலில் சேர்க்கப்போறீங்களா… இந்த 8 விஷயங்களைச் செக் பண்ணுங்க!.

கொரொனா நோய்த் தொற்று உலகம் முழுவதுமே ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது. அதனால், பள்ளிகள், கல்லூரிகள் எதுவும் இயங்கவில்லை. தேர்வுகளைக்கூட ரத்து செய்துவிட்டார்கள். ஆனாலும், பள்ளிகளில் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தத் தொடங்கிவிட்டார்கள். பெற்றோர்களும் பிள்ளைகளைப் பள்ளியில்...

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 161 பேருக்கு கொரோனா உறுதி!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 4,244 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,38,470 ஆக அதிகரித்துள்ளது நேற்று...

`அபராதத்துடன் கட்டணத்தை செலுத்தணும்!’- நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தால் கொந்தளிக்கும் பெற்றோர்கள்

தேர்வுக் கட்டணத்தைச் செலுத்தாத மாணவர்கள் அபராத தொகையுடன் தேர்வுக் கட்டணத்தையும் செலுத்த நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு உத்தரவிட்டுள்ளது விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. கொரோனாவால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்....

கொரோனாவின் ருத்ரதாண்டவம் : இதுவரை 5 லட்சத்து 71 ஆயிரத்து 356 பேர் பலி!

கொரோனா வைரஸ் தற்போது 200ற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இதுவரை இதுவரை உலகம் முழுவதும்...
Open

ttn

Close