அப்பாவும் மகனும் இணைந்து நடிக்கும் சீயான் 60!

 

அப்பாவும் மகனும் இணைந்து நடிக்கும் சீயான் 60!

விக்ரம் நடிக்கும் சீயான் 60 படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடாரம் கொண்டான் படத்திற்குப் பிறகு சியான் விக்ரம் கோப்ரா மற்றும் . மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் விக்ரம் அடுத்து தனது அறுபதாவது படத்திற்காக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் உடன் கூட்டணி சேர்வது உறுயாகியுள்ளது.

அப்பாவும் மகனும் இணைந்து நடிக்கும் சீயான் 60!

இந்த படத்தில் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஒரு முக்கிய ரோலில் நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இந்தபடத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கவுள்ளது. சியான் 60 என தற்போதைக்கு பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளார். இப்படம் குறித்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களிலேயே ட்விட்டர் ட்ரெண்டிங்கை #Chiyaan60 என்ற ஹேஷ்டேக் ஆக்கிரமித்துள்ளது.