செவ்வாயை அதிபதியாக கொண்ட நட்சத்திரம் – சித்திரை பொதுப் பலன்கள்

27 நட்சத்திரங்களில் செவ்வாய் பகவானை அதிபதியாக கொண்ட இரண்டாவது நட்சத்திரம் சித்திரை ஆகும்.

27 நட்சத்திரங்களில் செவ்வாய் பகவானை அதிபதியாக கொண்ட இரண்டாவது நட்சத்திரம் சித்திரை ஆகும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தைரியசாலியாக இருப்பார்கள். தங்கள் பெற்றோர்களிடம் அன்பும் அக்கறையும் அதிகம் வைத்திருப்பார்கள். உதவி கேட்டு வருபவர்களுக்கு தங்களால் முடிந்த உதவியைச் செய்வார்கள். சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு கோபம் ஜாஸ்தி. தாங்கள் சொல்வதை மற்றவர்கள் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும் என நினைப்பார்கள். எந்த சூழலிலும் தங்கள் கொள்கைகளை விட்டு விலகிச் செல்ல மாட்டார்கள். தங்கள் வாழ்க்கை துணையை மிகவும் நேசிப்பார்கள். எதையும் வெளிப்படையாக பேசுவார்கள்.

astrology

எந்த சண்டைக்கும் போகவும் மாட்டார்கள், வந்த சண்டையை விடவும் மாட்டார்கள். தங்கள் குழந்தைகளிடம் அன்பையும், கண்டிப்பையும் சம அளவில் காட்டுவார்கள். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கற்பனைத் திறன் அதிகமாக இருக்கும். சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் உள்ளவர்கள் மற்றும் ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்களிடம் செல்வாக்கு பெற்றிருப்பார்கள். சாதுர்யமாகப் பேசி காரியம் சாதிப்பதில் வல்லவர்கள்.

Most Popular

மரணங்களைத் தடுக்கும் வழி என்பது மரணங்களை மறைப்பது அல்ல- ஸ்டாலின்

தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது. தினசரி கொரோனா மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும் அளவு அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து...

கேரள நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 28 பேர் ஆக அதிகரிப்பு

கேரளா: மூணாறு அருகே ராஜமலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. கேரள மாநிலம் மூணாறு பகுதியில் உள்ள பெட்டி முடி பகுதியில் உள்ள கண்ணன் தேவன் டீ எஸ்டேட் தேயிலைத்...

நீலகிரியில் கனமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் – விஜயகாந்த்

நீலகிரியில் கனமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீலகிரி மாவட்டத்தில் கடந்த 5 நாட்களுக்கும் மேலாக தொடர்...

“சொப்னா வழியே சிறந்த வழி” -என தங்க கடத்தலின் சொர்க்கபூமியாக மாறிய கேரளா -தொடரும் பல கடத்தல்கள்..

கேரளா மாநிலம் கண்ணூர் சர்வதேச விமான நிலையத்தில் கிட்டத்தட்ட ஒரு கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கேரள தங்க ஊழல் பற்றிய விசாரணை தீவிரமாக நடந்து வரும் வேளையில் , சொப்னா வழியில்,...