சிராக் பஸ்வானுக்கு அடுத்த அடி.. லோக் ஜன்சக்தி கட்சியின் தேசிய தலைவர் பதவியும் போச்சு

 

சிராக் பஸ்வானுக்கு அடுத்த அடி.. லோக் ஜன்சக்தி கட்சியின் தேசிய தலைவர் பதவியும் போச்சு

லோக் ஜன்சக்தி கட்சியின் தலைவர் பதவியிலிருந்து சிராக் பஸ்வான் நீக்கப்பட்டு, சூரஜ் பன் கட்சியின் செயல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

லோக் ஜன்சக்தி கட்சியின் தலைவர் சிராக் பஸ்வானுக்கு எதிராக மறைந்த ராம் விலாஸ் பஸ்வானின் சகோதரரும், சிராக் பஸ்வானின் சித்தப்பாவுமான பசுபதி குமார் பராஸ் உள்பட 5 எம்.பி.க்கள் எதிராக திரும்பினர். மேலும் லோக் ஜன்சக்தி கட்சியின் நாடாளுமன்ற மக்களவையின் தலைவராக உள்ள சிராக் பஸ்வானுக்கு பதிலாக பசுபதி குமார் பராஸை அந்த கட்சியின் எம்.பி.க்கள் தேர்வு செய்துள்ளனர். மக்களவை செயலகம் நேற்று முன்தினம் பசுபதி குமார் பராஸை அவையின் எல்.ஜே.பி.யின் தலைவராக அங்கீகரித்தது.

சிராக் பஸ்வானுக்கு அடுத்த அடி.. லோக் ஜன்சக்தி கட்சியின் தேசிய தலைவர் பதவியும் போச்சு
லோக் ஜன்சக்தி

சொந்த சித்தப்பாவே தனது எதிராக திரும்பியதால் சிராக் பஸ்வான் அதிர்ச்சியில் உறைந்தார். இதிலிருந்து மீள்வதற்குள் சிராக் பஸ்வானுக்கு அதிருப்தியாளர்கள் அடுத்த அதிர்ச்சியை கொடுத்துள்ளனர். லோக் ஜன்சக்தியின் தேசிய தலைவர் பதவியிலிருந்து சிராக் பஸ்வானை கட்சியின் அதிருப்தியாளர்கள் அதிரடியாக நீக்கியுள்ளனர். மேலும் சூரஜ் பன்னை லோக் ஜன்சக்தி கட்சியின் செயல் தலைவராகவும், கட்சியின் தேர்தல் அதிகாரியாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சிராக் பஸ்வானுக்கு அடுத்த அடி.. லோக் ஜன்சக்தி கட்சியின் தேசிய தலைவர் பதவியும் போச்சு
பசுபதி குமார் பராஸ்

மேலும் அவரிடம் லோக் ஜன்சக்தி கட்சியின் தேசிய செயற்குழுவை கூட்டி 5 நாட்களுக்குள் புதிய தலைவருக்கான தேர்தலை நடத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். லோக் ஜன்சக்தி கட்சியின் புதிய தலைவராக பசுபதி குமார் பராஸ் தேர்ந்தெடுக்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல். லோக் ஜன்சக்தி கட்சியில் கடந்த சில நாட்களாக நிகழும் மாற்றங்கள் பீகார் அரசியல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.