ஐக்கிய ஜனதா தள கட்சிக்கு ஒரு ஓட்டு விழுந்தாலும் பீகாரின் எதிர்காலம் நாசமாகி விடும்… சிராக் பஸ்வான் ஆவேசம்

ஐக்கிய ஜனதா தள கட்சிக்கு ஒரு ஓட்டு விழுந்தாலும் பீகாரின் எதிர்காலம் நாசமாகி விடும்… சிராக் பஸ்வான் ஆவேசம்

ஐக்கிய ஜனதா தள கட்சிக்கு ஒரு ஓட்டு விழுந்தாலும் பீகாரின் எதிர்காலம் நாசமாகக் கூடும் என லோக் ஜன்சக்தி கட்சியின் தலைவர் சிராக் பஸ்வான் தெரிவித்தார்.

பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தள கட்சிக்கும், மறைந்த ராம் விலாஸ் பஸ்வான் நிறுவிய லோக் ஜன்சக்திக்கும் இடையே கடும் பகை நிலவுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்று இருந்த லோக் ஜன்சக்தி, எதிர்வரும் பீகார் சட்டப்பேரவை தேர்தலில் நிதிஷ் குமார் தலைமையில் போட்டியிட மறுத்து கூட்டணியிலிருந்து வெளியேறியது. பீகார் சட்டப்பேரவை தேர்தலில் தனித்து போட்டியிடுவோம் அதேசமயம் பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு எதிராக மட்டும் வேட்பாளர்களை நிறுத்த மாட்டோம் என அந்த கட்சியின் தலைவர் சிராக் பஸ்வான் தெரிவித்தார்.

ஐக்கிய ஜனதா தள கட்சிக்கு ஒரு ஓட்டு விழுந்தாலும் பீகாரின் எதிர்காலம் நாசமாகி விடும்… சிராக் பஸ்வான் ஆவேசம்
சிராக் பஸ்வான்

லோக் ஜன்சக்தி கட்சி தலைவர் சிராக் பஸ்வான் தொடர்ந்து முதல்வர் நிதிஷ் குமாரையும், அவரது ஐக்கிய ஜனதா தள கட்சியையும் விமர்சித்து வருகிறார். அந்தவகையில் தற்போது சிராக் பஸ்வான் பேட்டி ஒன்றில், ஐக்கிய ஜனதா தள கட்சிக்கு ஒரு ஓட்டு விழுந்தாலும் முழு மாநிலத்தின் எதிர்காலமும் நாசமாகக் கூடும்.

ஐக்கிய ஜனதா தள கட்சிக்கு ஒரு ஓட்டு விழுந்தாலும் பீகாரின் எதிர்காலம் நாசமாகி விடும்… சிராக் பஸ்வான் ஆவேசம்
பீகார் முதல்வர் நிதிஷ் குமார்

கடந்த ஐந்து ஆண்டுகளில் நிதிஷ் குமாரின் பதவிக்காலத்தை பார்ப்பதன் மூலம் வரவிருக்கும் 5 ஆண்டுகள் எப்படி இருக்கும் என்பதை நாம் உண்மையில் கற்பனை செய்து பார்க்க முடியும். பீகாரை இந்த உதவியற்ற நிலையிலிருந்து வெளியேற்றுவதற்கு நாம் அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். பீகாரில் சட்டப்பேரவை தேர்தல் இம்மாதம் 28ம் தேதி தொடங்கி மொத்தம் 3 கட்டங்களாக நடைபெறுகிறது. நவம்பர் 10ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகிறது.