என்னையா, நிதிஷ் குமாரையா? யாரை ஆதரிக்க போறீங்கன்னு முடிவு பண்ணுங்க.. பா.ஜ.க.வை நெருக்கும் சிராக் பஸ்வான்

என்னையா, நிதிஷ் குமாரையா? யாரை ஆதரிக்க போறீங்கன்னு முடிவு பண்ணுங்க.. பா.ஜ.க.வை நெருக்கும் சிராக் பஸ்வான்

என்னையா அல்லது நிதிஷ் குமாரையா? யாரை ஆதரிக்க போறாங்கான்னு பா.ஜ.க. முடிவு செய்ய வேண்டும் என்று சிராக் பஸ்வான் வலியுறுத்தியுள்ளார்.

லோக் ஜன்சக்தி கட்சி உட்கட்சி பூசலால் 2 பிரிவாக வெடித்துள்ளது. சிராக் பஸ்வான் தலைமையில் ஒரு பிரிவும், சிராக் பஸ்வானின் சொந்த சித்தப்பா பசுபதி குமார் பராஸ் தலைமையில் ஒரு பிரிவும் செயல்பட்டு வருகிறது. லோக் ஜன்சக்தி கட்சியின் உள்கட்சி நெருக்கடியை தீர்க்க பா.ஜ.க. மற்றும் பிரதமர் மோடியை அணுக சிராக் பஸ்வான் முயன்று வருகிறார். ஆனால் பிரதமரும், பா.ஜ.க.வும் லோக் ஜன்சக்தி கட்சி விவகாரத்தில் தலையிடவில்லை. இந்த சூழ்நிலையில், தங்களது கூட்டணிக்கு வர வேண்டும் என்று சிராக் பஸ்வானுக்கு தேஜஸ்வி யாதவ் அழைப்பு விடுத்துள்ளார்.

என்னையா, நிதிஷ் குமாரையா? யாரை ஆதரிக்க போறீங்கன்னு முடிவு பண்ணுங்க.. பா.ஜ.க.வை நெருக்கும் சிராக் பஸ்வான்
சிராக் பஸ்வான்

இந்நிலையில் லோக் ஜன்சக்தி கட்சியின் 2 பிரிவுகளில் ஒரு பிரிவின் தலைவரான சிராக் பஸ்வான் கூறியதாவது: குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு உள்பட ஒவ்வொரு நடவடிக்கையிலும் நான் பா.ஜ.க.வுடன் நின்றேன். இருப்பினும் நிதிஷ் ஜி இதை (சி.ஏ.ஏ., என்.ஆர்.சி.) ஏற்கவில்லை. வரும் நாட்களில் என்னை ஆதரிப்பார்களா அல்லது நிதிஷ் குமாரை ஆதரிப்பார்களா என்பதை இப்போது பா.ஜ.க. முடிவு செய்ய வேண்டும்.

என்னையா, நிதிஷ் குமாரையா? யாரை ஆதரிக்க போறீங்கன்னு முடிவு பண்ணுங்க.. பா.ஜ.க.வை நெருக்கும் சிராக் பஸ்வான்
நிதிஷ் குமார்

அனைவருக்கும் தெரியும். இது வெளிப்படையான ரகசியம். இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் கட்சியில் பிளவுகளை உருவாக்க முதல்வர் முயன்றது இது முதல் முறை அல்ல. இது அவரது செயல்பாட்டு பாணியாக இருந்து வருகிறது. 2005ம் ஆண்டில் எங்க கட்சி 29 எம்.எல்.ஏ.க்கள் வென்றபோது, நிதிஷ்குமார் எங்க கட்சியை உடைத்தார். 2020 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற எங்க கட்சியின் ஒரே வேட்பாளரையும் பிரித்தார். கட்சியை உடைப்பது அவர்களின் பாரம்பரியம். பின் தனக்கு எந்தவொரு பங்கு இல்லை என்று எந்த முகத்துடன் சொல்கிறார்?