• April
    02
    Thursday

Main Area

Main



4 மாத கூண்டு வாசத்துக்கு பின் வன வாசத்தை கண்ட சின்னதம்பி!

Chinna thambi
Chinna thambi

கோவையில் பிடிக்கப்பட்ட காட்டு யானை சின்னதம்பி பயிற்சி முடிக்கப்பட்டு வரகளியார் முகாமில் உள்ள மரக்கூட்டில் இருந்து வெளியேற்றப்பட்டது.

கோவை  தடாகம் பகுதியில் கடந்த ஜனவரி 25ஆம் தேதி பிடிக்கப்பட்ட காட்டு யானை சின்னதம்பி பொள்ளாச்சி அடுத்த மேற்குத்தொடர்ச்சி மலைபகுதியில் விடப்பட்டது. பின்னர் அந்த யானை மீண்டும் வனத்தை விட்டு வெளியே வந்து விவசாய தோட்டங்களில் உள்ள பயிர்களை சேதப்படுத்தியது. பின்னர் நீதிமன்றம் இட்ட உத்தரவின் பேரில் உடுமலை கண்ணாடி புத்தூர் பகுதியில் பிப்ரவரி 26 ஆம் தேதி பிடிக்கப்பட்டு டாப்ஸ்லிப் வரகழியாறு யானைகள் பயிற்சி முகாமில் உள்ள கூண்டில்  அடைக்கப்பட்டு தற்போது வரை மூன்றரை மாதம் அந்த யானைக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. பின்னர் பயிற்சி முடிக்கப்பட்டு வரகழியாறு முகாமில் உள்ள மரக் கூட்டில் இருந்து இன்று வெளியேற்றப்பட்டது. இந்நிலையில் தற்போது சின்னத்தம்பி யானையோடு சேர்த்து 25 வளர்ப்பு யானைகள் டாப்ஸ்லிப்பில் உள்ள கோழிகமுத்தி மற்றும் வரகழியாறு ஆகிய பயிற்சி முகாம்களில் உள்ளது.

2018 TopTamilNews. All rights reserved.