• April
    02
    Thursday

Main Area

Main



சீனாவிலிருந்து ராமேஸ்வரத்திற்கு வந்த சீன பெண்... உடனடியாக சென்னைக்கு அனுப்பி வைத்த அதிகாரிகள்!

 சீன பெண் ஜியாஞ்சுன்
சீன பெண் ஜியாஞ்சுன்

கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை சீனாவில் 1770 பேர் உயிரிழந்துள்ளனர். 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வைரஸ் பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.  வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த உலக சுகாதார நிறுவனத்தின் மருத்துவர் குழுவுடன், சீன மருத்துவ நிபுணர்கள் ஆலோசித்தும், தீவிர ஆய்வு நடத்தியும் வருகிறார்கள். 

ttn

மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக   ஜனவரி 15 அல்லது அதற்கு பிறகு சீனாவில் தங்கியிருந்தவர்கள் நேபாளம், பூடான், பங்களாதேஷ், மியான்மர் எல்லைகள் வழியே ஆகாயம், தரை மற்றும் கடல் வழியாக இந்தியா வர தடைவிதிக்கப்பட்டுள்ளது.

ttn

இந்நிலையில் ஆன்மீக பயணமாக சீனாவிலிருந்து ஜியாஞ்சுன் (48) என்ற பெண் கடந்த ஜனவரி 21-ஆம் தேதி  கொல்கத்தா வந்துள்ளார். அங்கிருந்து பல்வேறு ம்,மாநிலங்களுக்குச் சென்ற அவர் நேற்று இரவு ராமேஸ்வரத்தை  வந்தடைந்துள்ளார்.  பின்னர் அங்குள்ள  தனியார் விடுதியில் தங்கியுள்ளார். இதுகுறித்து விடுதி நிர்வாகம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளது. 

ttn

இதனையடுத்து சீன பயணிக்கு  சுகாதார அதிகாரிகள் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். இதை தொடர்ந்து அடுத்தகட்ட பரிசோதனைக்காக அவர்  அங்கிருந்து மதுரைக்கு அழைத்துவரப்பட்டு அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். சென்னையில் அவருக்கு கொரோனா வைரல் பாதிப்பு உள்ளதா என்று ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது. 

2018 TopTamilNews. All rights reserved.