ஒரு நிமிடத்தில் வெடித்துச் சிதறிய சீன ராக்கெட்! – இரண்டு செயற்கைக்கோள்களை பறிகொடுத்த பரிதாபம்!

 

ஒரு நிமிடத்தில் வெடித்துச் சிதறிய சீன ராக்கெட்! – இரண்டு செயற்கைக்கோள்களை பறிகொடுத்த பரிதாபம்!

சீனாவின் ராக்கெட் புறப்பட்ட ஒரு நிமிடத்தில் வெடித்துச் சிதறியதால் விஞ்ஞானிகள் அதிர்ச்சியடைந்தனர். இதன் மூலம் இரண்டு செயற்கைக்கோளை விண்ணில் நிலைநிறுத்தும் சீனாவின் முயற்சி தோல்வியில் முடிந்தது.

ஒரு நிமிடத்தில் வெடித்துச் சிதறிய சீன ராக்கெட்! – இரண்டு செயற்கைக்கோள்களை பறிகொடுத்த பரிதாபம்!நேற்று முன்தினம் அது வெற்றிகரமாக ஒரு ராக்கெட்டை செலுத்தி செயற்கைக் கோளை நிலை நிறுத்தியிருந்தது. நேற்று குய்சோ 11 என்ற ராக்கெட் மூலம் இரண்டு செயற்கைக் கோள்களை விண்ணில் நிலை நிறுத்த திட்டமிட்டிருந்தது. குய்சோ ராக்கெட் என்பது சீனாவின் வெற்றிகரமான ராக்கெட் திட்டமாகும். குய்சோ ராக்கெட்டை மேம்படுத்தி நேற்று அதன் மூலம் செயற்கைக்கோளை செலுத்தும் பணி நடந்தது.

ஒரு நிமிடத்தில் வெடித்துச் சிதறிய சீன ராக்கெட்! – இரண்டு செயற்கைக்கோள்களை பறிகொடுத்த பரிதாபம்!

சீனாவின் வட மேற்கு பகுதியில் உள்ள ராக்கெட் ஏவு தளத்திலிருந்து செலுத்தப்பட்டது. ஆனால் செலுத்தப்பட்ட ஒரு நிமிடத்தில் ராக்கெட் ஏவும் முயற்சி தோல்வியில் முடிந்ததாக சீனா தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியான வீடியோவில் முதல் ஒரு நிமிடம் எல்லாம் சரியாகப் போவது போல உள்ளது. ராக்கெட்டின் முதல் மற்றும் இரண்டாவது நிலை வெற்றிகரமாக சென்றது. அதன்பிறகு அதில் கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த ராக்கெட் செலுத்தும் முயற்சி 2020ம் ஆண்டின் சீனாவின் 19வது முயற்சியாகும். இந்த ஆண்டு இதனுடன் சேர்த்து சீனா மூன்று தோல்விகளை சந்தித்துள்ளது.