புதிய கல்விக் கொள்கை விருப்பப் மொழி பட்டியலிலிருந்து சீன மொழி நீக்கம்!

புதிய கல்விக் கொள்கை விருப்பப் மொழி பட்டியலிலிருந்து சீன மொழி நீக்கம்!

இரண்டு நாட்களுக்கு முன்பு மத்திய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட புதிய கல்விக் கொள்கையில் விருப்ப வெளிநாட்டு மொழிகள் பட்டியலில் இருந்து சீன மொழி நீக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

புதிய கல்விக் கொள்கை விருப்பப் மொழி பட்டியலிலிருந்து சீன மொழி நீக்கம்!
மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை ஏற்பதாக அறிவித்துள்ளது. புதிய கல்விக் கொள்கை பற்றிய முழு தகவலும் வெளியாகவில்லை. சிறிது சிறிதாக தகவல் வெளியாகி வருகிறது. தற்போது விருப்ப வெளிநாட்டு மொழிகள் பற்றிய செய்தி வெளியாகி உள்ளது.

புதிய கல்விக் கொள்கை விருப்பப் மொழி பட்டியலிலிருந்து சீன மொழி நீக்கம்!
2019ம் ஆண்டு வெளியான வரைவு புதிய கல்விக் கொள்கையில் வெளிநாட்டு மொழிகள் பட்டியலில் சீன மொழியும் இருந்தது. இதன் மூலம் மேல்நிலைக் கல்வியில் மாணவர்கள் விருப்ப மொழியாக சீன மொழியை எடுத்துப் படிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்பட்டது.

புதிய கல்விக் கொள்கை விருப்பப் மொழி பட்டியலிலிருந்து சீன மொழி நீக்கம்!
தற்போது வெளியாகி உள்ள ஏற்றுக்கொள்ளப்பட்ட புதிய கல்விக் கொள்கையில் விருப்ப வெளிநாட்டு மொழிகள் பட்டியலில் பிரெஞ்சு, ஜெர்மனி, ஸ்பானிஷ், ஜப்பானிஸ், கொரியன், தாய், போர்த்துகீஸ், ரஷ்யன் உள்ளிட்ட மொழிகள் மட்டுமே உள்ளன.

இது குறித்து புதிய கல்விக் கொள்கையை வடிவமைத்த குழுவில் இருந்தவர்களிடம் விசாரித்த போது, “புதிய கல்விக் கொள்கையில் மேற்கொள்ளப்பட்ட மாறுதல்கள் பற்றி எங்களுக்குத் தெரியாது. அதே நேரத்தில் ஏன் விடுபட்டது என்பதற்கான காரணம் எல்லோரும் அறிந்ததுதான்” என்றனர்.
லடாக் எல்லையில் சீன ராணுவம் நடத்திய தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் பலியாகினர். இதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. எல்லையில் பதற்றம் இன்னும் தணியவில்லை.

புதிய கல்விக் கொள்கை விருப்பப் மொழி பட்டியலிலிருந்து சீன மொழி நீக்கம்!

100க்கும் மேற்பட்ட சீன ஆப்-களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புதிய கல்விக் கொள்கையிலிருந்து சீன மொழி நீக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இந்தியாவில் சீன மொழியைக் கற்பது அதிகரித்து வருகிறது. அதிக அளவில் சீனாவுடன் இந்தியா வர்த்தகத் தொடர்பு கொண்டிருப்பதால் பலரும் சீனம், ஜப்பானிய மொழிகளை கற்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.