”சீன முதலீடு இந்தியாவில் 3 ஆண்டுகளாக சரிவு ”- மத்திய இணை அமைச்சர் தகவல்!

”சீன முதலீடு இந்தியாவில் 3 ஆண்டுகளாக சரிவு ”- மத்திய இணை அமைச்சர் தகவல்!

சீனாவில் இருந்து இந்தியாவில் மேற்கொள்ளப்படும் அன்னிய நேரடி முதலீடு, கடந்த 3 நிதியாண்டுகளாக தொடர்ந்து குறைந்து வருகிறது.

இந்த தகவலை மக்களவையில், மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் சிங் தாகூர் தெரிவித்துள்ளார்.

”சீன முதலீடு இந்தியாவில் 3 ஆண்டுகளாக சரிவு ”- மத்திய இணை அமைச்சர் தகவல்!

கடந்த 2017-18ம் நிதியாண்டில் ரூ. 2,573 கோடி ரூபாயாக இருந்த சீனாவின் அன்னிய நேரடி முதலீட்டு அளவு, அடுத்த 2018-19ம் நிதியாண்டில் ஆயிரத்து 600 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
இந்நிலையில், 2019-20ம் நிதியாண்டில், இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட சீனாவின் அன்னிய நேரடி முதலீடு, ஆயிரத்து 200 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த அனுராக் தாகூர், இந்த தகவலை தெரிவித்தார்.

-எஸ்.முத்துக்குமார்