அஜித் தோவலை களமிறக்கிய பிரதமர் மோடி… எல்லையில் படைகளை பின்வாங்கும் சீனா…

 

அஜித் தோவலை களமிறக்கிய பிரதமர் மோடி… எல்லையில் படைகளை பின்வாங்கும் சீனா…

கடந்த மாதம் முதல் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் சீன ராணுவம் படைகளை குவித்து வந்தது. இதனையடுத்து நமது ராணுவமும் எல்லையில் படைகளை குவித்தது. இதனால் இந்திய-சீன எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் பதற்றம் நிலவியது. எல்லையில் பதற்றத்தை தணிக்கும் பொருட்டு இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் சந்தித்து பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது எல்லையில் படைகளை பின்வாங்குவது என இரு தரப்பும் ஒப்புக்கொண்டது. ஆனால் சீனா பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொண்டதற்கு மாறாக எல்லையில் படையை பலப்படுத்தியது. இதனையடுத்து நமது ராணுவமும் எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்தியது.

அஜித் தோவலை களமிறக்கிய பிரதமர் மோடி… எல்லையில் படைகளை பின்வாங்கும் சீனா…

இந்த சூழ்நிலையில் மோடியின் நம்பிக்கைக்குரியவரான தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இந்த விவகாரத்தில் களம் இறக்கப்பட்டார். கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று அஜித் தோவலும், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ-ம் டெலிபோனில் சுமார் 2 மணி நேரம் வெளிப்படையாக மற்றும் ஆழமாக கருத்துக்களை பரிமாறி கொண்டனர். இதனையடுத்து சீனா படைகளை பின்வாங்க ஒப்புக்கொண்டது. இது தொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறுகையில், தோவல் மற்றும் வாங் பேச்சுவார்த்தையின்போது, அமைதி மற்றும் அமைதியின் முழு மறுசீரமைப்புக்காக உண்மையான எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் துருப்புகளை பின்வாங்குவது மற்றும் இந்திய-சீன எல்லைகளில் விரிவாக்கத்தை குறைப்பதை விரைவில் உறுதி செய்ய வேண்டியது அவசியம் என்பது ஒப்புக்கொள்ளப்பட்டது என தெரிவித்தது.

அஜித் தோவலை களமிறக்கிய பிரதமர் மோடி… எல்லையில் படைகளை பின்வாங்கும் சீனா…

அதன்படி, எல்லையில் சீனர்கள் கல்வானில் தங்களது துருப்புகள், கூடாரங்களையும் 2 கிலோ மீட்டர் தூரத்தில் திரும்ப பெற தொடங்கியுள்ளனர். அடுத்த சில தினங்களில், பிபி-14, பிபி-15, ஹாட் ஸ்பிரிங்ஸ் மற்றும் பிங்கர்ஸ் உள்ளிட்ட பிறபகுதிகளிலும் சீன ராணுவம் தனது படைகளை பின்வாங்கும் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இந்திய ராணுவமும் எல்லையில் தனது படைகளை பின்வாங்க தொடங்கியுள்ளது. இந்திய-சீன எல்லை நிலவரத்தை இந்திய ராணுவத்துடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தொடர்ந்து கண்காணித்து வருகிறார். இந்தியா-சீனா இடையிலான மோதல் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.