இந்திய தடுப்பூசி நிறுவனங்களை ஊடுருவும் சீன ஹேக்கர்கள்!

 

இந்திய தடுப்பூசி நிறுவனங்களை ஊடுருவும் சீன ஹேக்கர்கள்!

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த மே மாதம் எல்லை பிரச்னை ஏற்பட்டது. இதனையடுத்து இரு நாடுகளும் எல்லையில் போரிட்டன. இதில் இருநாட்டு வீரர்களும் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய சீன செயலிகளை தடை விதித்தது. தற்போது அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சீனாவை சேர்ந்த ஹேக்கர்கள் இந்தியா மீது சைபர் போர் தொடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

இந்திய தடுப்பூசி நிறுவனங்களை ஊடுருவும் சீன ஹேக்கர்கள்!

சீனாவின் அரசுக்கு ஆதரவாக செயல்பட்டும் ஹேக்கிங் குழு கடந்த வாரம் இந்தியாவின் கொரோனா தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமா சீரம் இன்ஸ்டிடியூட் மற்றும் பாரத் பயோடெக் ஆகிய இணையதளங்களை ஊடுருவியுள்ளது. கொரோனா தடுப்பூசி மூலக்கூறுகளை திருடுவதற்காக சீன ஹேக்கர்கள் இத்தகைய செயல்களில் ஈடுபட்டிருக்கலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். சீனாவிடமிருந்து கொரோனா வைரஸ் இந்தியாவுக்குள் வந்தாலும், அதற்கான தடுப்பூசியை இந்தியா, சீனா உள்ளிட்ட எந்த நாடுகளிடமும் கையேந்தவில்லை. மாறாக இந்தியா பிரேசில் உள்ளிட்ட நாடுகளுக்கு தான் கண்டுபிடித்த கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசியை விநியோகித்துவருகிறது. உலகில் விற்கப்படும் அனைத்து தடுப்பூசிகளிலும் 60% க்கும் அதிகமானவற்றை இந்தியா உற்பத்தி செய்த இந்த தடுப்பூசிகளாகும்.

இந்திய தடுப்பூசி நிறுவனங்களை ஊடுருவும் சீன ஹேக்கர்கள்!

சீனாவை சேர்ந்த ஹேக்கிங் குழுவான ஏபிடி 10, பாரத் பயோடெக் மற்றும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (எஸ்ஐஐ) ஆகியவற்றின் தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு மற்றும் சாப்ட் வேர்களை வேவு பார்த்ததாக சீங்கப்பூர் மற்றும் ஜப்பானை சேர்ந்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் இதுகுறித்து பாரத் பயோடெக் மற்றும் சீரன் இன்ஸ்டிடியூட் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டன. சீன நீதித்துறை அமைச்சகத்துடன் இணைந்து ஏபிடி 10 என்ற ஹேக்கிங் குழு செயல்பட்டதாக அமெரிக்க நீதித்துறை கடந்த 2018 ஆம் ஆண்டே கண்டுபிடித்து கூறியுள்ளது.

இந்தியா, கனடா, பிரான்ஸ், தென் கொரியா மற்றும் அமெரிக்காவில் உள்ள கோவிட் -19 தடுப்பூசி நிறுவனங்கள் மீது ரஷ்யாவும், வடகொரியாவும் சைபர் தாக்குதல் நடத்தியதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் குற்றஞ்சாட்டியிருந்தது. தடுப்பூசியை உருவாக்குவதை விட அதனை பிற நாடுகளிலிருந்து பாதுகாப்பது மிகப்பெரிய சவலாகவே உள்ளது.