சைனீஸ் ஃபுட்டை தடை செய்ய வேண்டும்! – மத்திய அமைச்சர் சொல்கிறார்

 

சைனீஸ் ஃபுட்டை தடை செய்ய வேண்டும்! – மத்திய அமைச்சர் சொல்கிறார்

உணவகங்களில் விற்பனை செய்யப்படும் சைனீஸ் ஃபுட்டை தடை செய்ய வேண்டும் என்று மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

http://


இந்தியா- சீனா இடையே லடாக் எல்லையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்பதே இந்தியர்களின் உணர்வாக உள்ளது. ஆனால், மத்திய அரசே சீன நிறுவனத்துக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் டெண்டர் வழங்கிக் கொண்டிருக்கிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

சைனீஸ் ஃபுட்டை தடை செய்ய வேண்டும்! – மத்திய அமைச்சர் சொல்கிறார்இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, “உணவகங்களில் சைனீஸ் ஃபுட் விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டும். சீன உணவுகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று மக்களை நான் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.