மோதலை தவிர்க்க விரும்பும் சீனா….டிராகனும், யானையும் இணைந்து நடனமாடலாம்…. சீன தூதர் பேச்சு…

மோதலை தவிர்க்க விரும்பும் சீனா….டிராகனும், யானையும் இணைந்து நடனமாடலாம்…. சீன தூதர் பேச்சு…

லடாக் பகுதியில் இந்திய, சீன ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த சூழ்நிலையில், நேற்று இந்தியாவுக்கான சீன தூதர் சன் வீடோங் கூறியதாவது: வேறுபாடுகள் நம் உறவுகளை மறைக்க அனுமதிக்கக்கூடாது. தகவல்தொடர்பு மூலம் நாம் வேறுபாடுகளை தீர்க்க வேண்டும். கோவிட்-19க்கு எதிராக இந்தியாவும், சீனாவுன் ஒன்றிணைந்து போராடுகின்றன.

மோதலை தவிர்க்க விரும்பும் சீனா….டிராகனும், யானையும் இணைந்து நடனமாடலாம்…. சீன தூதர் பேச்சு…

உறவுகளை பலப்படுத்துவதில் நமக்கு முக்கிய பணி உள்ளது. சீனா மற்றும் இந்தியாவுக்கும் இடையிலான உறவை நம் இளைஞர்கள் உணர வேண்டும். 2 நாடுகளும் ஒருவருக்கொருவர் வாய்ப்புகள் மற்றும் எந்த அச்சுறுத்தலும் இல்லை. டிராகனும், யானையும் இணைந்து நடனமாடலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார். எல்லையில் மோதலை தவிர்க்கவே சீனா விரும்புகிறது என்பதை வீடோங்கின் பேச்சு எதிரொலிப்பதாக உள்ளது.

மோதலை தவிர்க்க விரும்பும் சீனா….டிராகனும், யானையும் இணைந்து நடனமாடலாம்…. சீன தூதர் பேச்சு…

முன்னதாக சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியன், எல்லையில் நிலவரம் ஒட்டு மொத்த அளவில் நிலையாக மற்றும் கட்டுப்பாடாக உள்ளது. உரையாடல் மற்றும் முறையான ஆலோசனையின் மூலம் மோதல்களை தவிர்க்க இரு நாடுகளுக்கும் சரியான வழிமுறைகள் மற்றும் தகவல் தொடர்பு தடங்கள் உள்ளன. எல்லை தொடர்பான விஷயங்களில் சீனா தெளிவான மற்றும் நிலையான நிலைப்பாட்டை கொண்டுள்ளது என தெரிவித்து இருந்தார். அதன் பிறகே இந்தியாவுக்கான இந்திய தூதர் வீடோங் தனது கருத்தை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.