இந்தியாவில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை மட்டுமே ரூ.1.40 லட்சம் கோடிக்கு விற்ற சீன நிறுவனங்கள்….

இந்தியாவில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை மட்டுமே ரூ.1.40 லட்சம் கோடிக்கு விற்ற சீன நிறுவனங்கள்….

கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் உயிர் இழந்ததையடுத்து கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக நம் நாட்டில் அனைத்து தரப்பினரும் சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என தீவிரமான உணர்வில் உள்ளனர். நாம் சீனா பொருட்களை முற்றிலுமாக புறக்கணித்தால் அது அந்நாட்டுக்கு மிகப்பெரிய பொருளாதார அடியாக விழும் என்பதில் சந்தேகம் இல்லை. ஏனென்றால் ஏ முதல் இசட் என அனைத்து துறைகளிலும் சீன தயாரிப்புகள் குவிந்து கிடக்கின்றன.

இந்தியாவில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை மட்டுமே ரூ.1.40 லட்சம் கோடிக்கு விற்ற சீன நிறுவனங்கள்….

உதாரணமாக, கடந்த 2019ம் ஆண்டில் சீன நிறுவனங்கள் டி.வி. செல்போன், லேப்டாப் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை மட்டுமே ரூ.1.40 லட்சம் கோடிக்கு விற்பனை செய்துள்ளது. அதுவும், லாவா, மைக்ரோமேக்ஸ், இன்டெக்ஸ் மற்றும் கார்பன் உள்ளிட்ட இந்திய பிராண்டுகள் மற்றும் தென்கொரியா (சாம்சங், எல்.ஜி) மற்றும் ஜப்பான் (சோனி) ஆகிய வெளிநாட்டு பிராண்டுகளின் விலையில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை சீன நிறுவனங்கள் விற்பனை செய்கின்றன.

இந்தியாவில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை மட்டுமே ரூ.1.40 லட்சம் கோடிக்கு விற்ற சீன நிறுவனங்கள்….

கடந்த ஆண்டில் இந்தியாவில் ஸ்மார்ட்போன்கள் பிரிவில் விற்பனை வருவாயில் 71 சதவீத பங்களிப்பை சீன நிறுவனங்கள் கொண்டுள்ளன. கடந்த மார்ச் காலாண்டில் இது 81 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதேசமயம், ஜியோமி, விவோ மற்றும் ரியல்மீ உள்ளிட்ட பல சீன நிறுவனங்களின் வளர்ச்சி இந்திய ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள் பெரிய அடியாக விழுந்துள்ளது. கடந்த ஆண்டில் செல்போன் பிரிவில் விற்பனை வருவாயில் இந்திய நிறுவனங்களின் பங்களிப்பு வெறும் 1.6 சதவீதம் மட்டுமே. அதுவும் கடந்த மார்ச் காலாண்டில் 1 சதவீதமாக குறைந்துள்ளது. இந்த புள்ளிவிவரங்கள் கவுன்டர்பாயிண்ட் ரிசர்ச் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை மட்டுமே ரூ.1.40 லட்சம் கோடிக்கு விற்ற சீன நிறுவனங்கள்….

இந்த புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பார்த்தால் சீன நிறுவனங்களுக்கு இந்தியா மிகப்பெரிய பண சந்தையாக இருக்கிறது. ஆக, இந்தியர்கள் எல்லோரும் ஒட்டு மொத்தமாக சீன பொருட்களை புறக்கணித்தால் அது அந்நாட்டு நிறுவனங்களுக்கும் மட்டுமல்ல அந்நாட்டுக்கும் பெரிய அடியாக இருக்கும். அதேசமயம் உள்நாட்டு நிறுவனங்களுக்கும் வாழ்வு கிடைக்கும்.