கொரோனா ஹாட்ஸ்பாட்டாக மாறி வரும் சீனாவின் சின்ஜியாங் மாகாணம்!

 

கொரோனா ஹாட்ஸ்பாட்டாக மாறி வரும் சீனாவின் சின்ஜியாங் மாகாணம்!

சீனாவின் ஹுபே மாகாணத்தில் கொரோனாத் தொற்று கண்டறியப்பட்டது. அதன்பிறகு உலகம் முழுக்க கொரோனா பரவியது. ஆனால், சீனாவில் மட்டும் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அங்கொன்றும் இங்கொன்றுமாக கொரோனா கண்டறியப்பட்டாலும் ஹுபே நகரில் ஏற்பட்டதைப் போன்று மிக மோசமான பாதிப்பு சீனாவில் எங்கும் இல்லை.

கொரோனா ஹாட்ஸ்பாட்டாக மாறி வரும் சீனாவின் சின்ஜியாங் மாகாணம்!

இந்த நிலையில் சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அங்கு தலைநகர் பகுதியில் மட்டும் தற்போது 69 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 64 பேருக்கு எந்த அறிகுறியும் இல்லை. நேற்று ஒரே நாளில் 9 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா ஹாட்ஸ்பாட்டாக மாறி வரும் சீனாவின் சின்ஜியாங் மாகாணம்!மற்றொரு நகரான உரும்க்யூவில் 14 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இது தவிர வேறு சில பகுதிகளிலும் கொரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். இதனால் அந்த மாவட்டத்தில் கொரோனாவைத் தடுக்க அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

கொரோனா ஹாட்ஸ்பாட்டாக மாறி வரும் சீனாவின் சின்ஜியாங் மாகாணம்!சீனாவில் ஊரடங்கு மிகக் கடுமையாக அமல்படுத்தப்படுகிறது. பரிசோதனை உள்ளிட்டவை விரைவுபடுத்தப்படுகின்றன. இதனால் ஹுபேவில் கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அதன்பிறகு சீன தலைநகர் பெய்ஜிங்கில் கொரோனா தென்பட்டதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பரவல் நின்றது குறிப்பிடத்தக்கது.