பிரேசிலில் இருந்து வந்த கோழி இறைச்சியில் கொரோனா! – சீனா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

 

பிரேசிலில் இருந்து வந்த கோழி இறைச்சியில் கொரோனா! – சீனா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

பிரேசில் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கோழி இறைச்சியில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சீனா பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது.

பிரேசிலில் இருந்து வந்த கோழி இறைச்சியில் கொரோனா! – சீனா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
சீனாவின் வூகான் மாகாணத்தில் முதன் முதலாக கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவிவிட்டது. சீனாவில் கட்டுப்பாடுகள் காரணமாக கொரோனா பரவல் குறைந்துவிட்டதாக கூறப்படுகிறது. அங்கு நடக்கும் கம்யூனிச ஆட்சியில் செய்திகள் தணிக்கை செய்யப்படுவதால் உண்மை தகவல் வெளியாகவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

பிரேசிலில் இருந்து வந்த கோழி இறைச்சியில் கொரோனா! – சீனா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
இந்த நிலையில், சீனாவின் சென்ஷென் நகரில் பிரேசில் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கோழி இறைச்சியில் கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரேசிலில் இருந்து உறைநிலையில் உள்ள கோழி இறகு பகுதி சென்ஷென் நகருக்கு வந்துள்ளது. இதை அதிகரிகள் சோதனை செய்துப் பார்த்துள்ளனர். இதில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. இதைத் தொடர்ந்து எந்த சரக்கு பெட்டகத்தில் வந்த கோழி இறைச்சியில் கொரோனா உறுதியானது என்று அதிகாரிகள் ஆய்வு செய்து கண்டறிந்தனர். அதனுடன் வந்த மற்ற இறைச்சிகளை ஆய்வு செய்து பார்த்த போது அவற்றில் தொற்று இல்லை என்பது தெரியவந்தது.


இதைத் தொடர்ந்து வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இறைச்சி வகைகள் பற்றி மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். அவற்றை நன்கு சமைத்த பிறகே சாப்பிட வேண்டும் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும் உணவு வகைகள் தீவிர பரிசோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் அரசு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த புதன் கிழமை ஈக்வடார் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இறாலில் கொரோனா வைரஸ் இருந்ததாக சீனா அறிவித்திருந்தது. இந்த நிலையில், பிரேசில் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இறைச்சியில் தொற்று இருப்பதாக அந்த நாடு கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் ஈரமான தட்பவெப்ப நிலையில் நீண்ட காலம் தாக்குப்பிடிக்கும் தன்மை கொண்டது. அதே நேரத்தில் அறை வெப்பநிலையில் அதனால் உயிர் வாழ முடியாது. சமைக்கும்போது அது முற்றிலும் அகற்றப்பட்டுவிடும். எனவே, இதில் பயப்படத் தேவையில்லை என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.