சீனா எல்லை விவகாரம்… வெள்ளிக்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டும் மோடி!

 

சீனா எல்லை விவகாரம்… வெள்ளிக்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டும் மோடி!

சீனா விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை மத்திய அரசு கூட்டியுள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

சீனா எல்லை விவகாரம்… வெள்ளிக்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டும் மோடி!எல்லையில் சீனா வாலாட்டி வருகிறது. இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. சீன தரப்பில் 50 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்தியா – சீனா இடையே போர் பதற்றம் உருவாகி உள்ள நிலையில் இந்தியா அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
இந்த நிலையில் எல்லைப் பிரச்னை தொடர்பாக விவாதிக்க வருகிற வெள்ளிக் கிழமை (19ம் தேதி) மாலை 5 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. காணொலி காட்சி மூலமாக இந்த கூட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சீன தாக்குதல் நடத்தியது திங்கட்கிழமை இரவில்… செய்தி வெளியானது செவ்வாய்க்கிழமை பிற்பகலில்… அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த வெள்ளிக்கிழமை வரை காத்திருக்க வேண்டுமா? காணொலியில் நடத்தப்படுவதால் உடனடியாக நடத்தி அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்வது சரியாக இருக்கும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.