’சீனா… சீனா… சீனா’ அமெரிக்க தேர்தல் பிரச்சாரத்தில் அடிக்கடி கேட்கும் வார்த்தை?

’சீனா… சீனா… சீனா’ அமெரிக்க தேர்தல் பிரச்சாரத்தில் அடிக்கடி கேட்கும் வார்த்தை?

உலகின் மிகப் பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவில் தேர்தல் பிரச்சாரத்தில் அனல் பறக்கிறது.  

’சீனா… சீனா… சீனா’ அமெரிக்க தேர்தல் பிரச்சாரத்தில் அடிக்கடி கேட்கும் வார்த்தை?

நவம்பர் மாதம் 3-ம் தேதியன்று அமெரிக்காவில் தேர்தல் நடக்கவிருக்கிறது.  குடியரசுக் கட்சி சார்ப்பில் தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் அதிபர் போட்டியில் குதிக்கிறார்.  ஜனநாயக் கட்சியின் சார்பில் அமெரிக்க அதிபர் வேட்பாளராகப் போட்டியிடுகிறார் ஜோ பிடன். துணை அதிபராக ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட  இந்திய வம்சாவளி பெண் கமலா ஹாரீஸைத் தேர்வு செய்யப்படிருக்கிறார். 

’சீனா… சீனா… சீனா’ அமெரிக்க தேர்தல் பிரச்சாரத்தில் அடிக்கடி கேட்கும் வார்த்தை?

அமெரிக்கத் தேர்தலில் டிரம்பின் கொரோனா கால நடவடிக்கைகள் முக்கியமான பேசுபொருளாக மாறிவிட்ட்டன. இவ்வளவு அலட்சியமாக பெருந்தொற்று நோயைக் கையாளலாமா? என்று டிரம்புக்கு எதிரான குரல்கள் ஒலிக்கின்றன. அதற்காக தேர்தலுக்கு ஓரிரு நாள் முன்பாவது கொரோனா தடுப்பூசியைக் கொண்டு வந்துவிட வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார் டிரம்ப்.

இந்நிலையில் ட்ரம்ப் கையில் எடுத்திருக்கும் இன்னோர் அஸ்திரம்தான் சீனா. தொடக்கம் முதலே ஜனநாயக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடனை சீனாவின் ஆதரவாளராகக் காட்டவே அதிக முயற்சி எடுத்து வருகிறார் ட்ரம்ப்.

’சீனா… சீனா… சீனா’ அமெரிக்க தேர்தல் பிரச்சாரத்தில் அடிக்கடி கேட்கும் வார்த்தை?

’அமெரிக்க தேர்தலில் ஜோ பிடன் வெற்றிப் பெற்றால் அது சீனா வெற்றி பெற்றது சமம்’

’ஜோ பிடன் வெற்றி பெற்றால் அது சீனாவுக்கே ஆதாயம்’

‘ஜோ பிடன் அதிபராகி விட்டால் அமெரிக்கர்களுக்கு கிடைத்து வரும் வேலைகளை சீன நாட்டினருக்குக் கொடுத்து விடுவார்’

’ஜோ பிடன் அதிபரானால் அமெரிக்கர்கள் சீன மொழியைக் கற்க வேண்டிய நிலை வந்துவிடும்’

’ஜோ பிடன் வெற்றி பெற்றால், அமெரிக்க நகரங்களையும் தொழிற்சாலைகளை அழிக்கவும் சீனாவுக்கு உதவுவார்’

‘ஜோ பிடன் ஒருமுறை கூட சீனாவுக்கு எதிராகப் பேசியதே இல்லை’

இவையெல்லாம் எதிர்கட்சி வேட்பாளர் ஜோ பிடனைப் பற்றி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தேர்தல் பிரச்சாரத்தில் சொன்னவை. இவற்றிற்கு எல்லாம் முத்தாய்ப்பாக, ’ஜோ பிடனின் திட்டமே மேட் இன் சீனா’ என்று கூறி திகைக்க வைத்திருக்கிறார்.

’சீனா… சீனா… சீனா’ அமெரிக்க தேர்தல் பிரச்சாரத்தில் அடிக்கடி கேட்கும் வார்த்தை?

டொனால்டு ட்ரம்பின் தேர்தல் உத்தியே ’அமெரிக்கர்களின் தேசப்பக்தியை கிளறிவிடுவதான். அதனால்தான் அமெரிக்க இளைஞர்களுக்கு வேலை என்பதையும் சீனாவை எதிரி நாட்டாகக் காட்டி, அதற்கு ஆதரவாக ஜோ பிடனைக் காட்டிவதையும் செய்கிறார். சீனாவே கொரோனா வைரஸை உருவாக்கி உலகம் முழுவதும் அனுப்பி வைத்ததாகவும் பிரச்சாரத்தில் ட்ரம்ப் கூறுவதையும் கேட்க முடிகிறது.

’சீனா… சீனா… சீனா’ அமெரிக்க தேர்தல் பிரச்சாரத்தில் அடிக்கடி கேட்கும் வார்த்தை?

ட்ரம்பின் கருத்துகளுக்கு ஜோ பிடன் தனது பதிலாக, “ட்ரம்ப் எந்த பிரச்னையும் எதிர்கொள்ள தெரியாதவர். கொரோனா நோய்ப் பரவலைக் கட்டுபடுத்த தெரியாமல் தோல்வி கண்டவர். சிறந்த தலைமை பண்புடன் செயல்பட தவறியவர்’ என்று பிரச்சாரக் கூட்டங்களில் பேசி வருகிறார்.