சீனாவின் கொரோனா தடுப்பூசி பரிசோதனை நிறுத்தம் – காரணம் இதுதான்!

 

சீனாவின் கொரோனா தடுப்பூசி பரிசோதனை நிறுத்தம் – காரணம் இதுதான்!

கொரோனா அச்சம் உலக மக்களை வாட்டி வதைக்கிறது. ஒருசில நாடுகளில் கொரோனாவின் புதிய நோயாளிகள் எண்ணிக்கை குறைந்தாலும், பல நாடுகளில் கொரோனா இரண்டாம் அலை வீசி வருகிறது. அதனால், புதிய நோயாளிகள் அதிகரிப்பதுடன் மரணமடைபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 5 கோடியே 24 லட்சத்து 67 40 ஆயிரத்து 865 பேர். கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 12 லட்சத்து 89 ஆயிரத்து 747 பேர்.

கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 3 கோடியே 66 லட்சத்து 76 ஆயிரத்து 965 நபர்கள். தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர் 1,44,74,152 பேர்.

சீனாவின் கொரோனா தடுப்பூசி பரிசோதனை நிறுத்தம் – காரணம் இதுதான்!

கொரோனா பரவலைத் தடுக்க தடுப்பூசி மட்டுமே தீர்வு எனும் நிலைக்கு உலகம் வந்து விட்டது என்றுகூட சொல்லலாம். ஏனெனில், அந்தளவுக்கு கொரோனாவின் தாக்கம் பல நாடுகளில் நீக்கமற நிறைந்திருக்கிறது.

அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி 90 சதவிகித பலனும், ரஷ்ய நாட்டு தடுப்பூசியான ஸ்புட்னிக் v 92 சதவிகித பலனும் அளிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், சீனாவின் கண்டுபிடிப்பான சைனோவேக் எனும் கொரோனா தடுப்பூசியைப் பரிசோதிப்பதை நிறுத்தி வைக்கச் சொல்லியுள்ளது பிரேசில்.

சீனாவின் கொரோனா தடுப்பூசி பரிசோதனை நிறுத்தம் – காரணம் இதுதான்!

பிரேசிலில் கொரோனா பாதிப்பு மிக அதிகம். இதுவரை 1.5 லட்சத்துக்கு மேலானோர்கள் கொரோனாவால் இறந்துவிட்டனர். அதனால், அந்நாட்டுக்கு கொரோனா தடுப்பூசி என்பது அவசியம் மட்டுமல்ல அவசரமும்கூட. இந்நிலையில் சைனோவேக் எனும் சீன அரசின் கொரோனா தடுப்பூசியைப் பரிசோதனை அளவில் பயன்படுத்திக்கொண்டிருந்தது.

பல விஷயங்கள் சரியாகவே போய்க்கொண்டிருந்த நிலையில், சைனோவேக் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டு, கண்காணிப்பில் இருந்த ஒரு தன்னார்வலர் திடீரென்று தற்கொலை செய்துகொண்டார். அதனால், அதிர்ச்சி அடைந்தனர் மருத்துவக் குழு. அரசின் கவனத்திற்கு இந்தத் தகவல் சென்றதும், சைனோவேக் தடுப்பூசி தொடர்பான பரிசோதனைகளை உடனே நிறுத்த சொல்லி உத்தரவிட்டது. ஆயினும் இது நிரந்தரமான நிறுத்தம் என்றும் சொல்வதற்கு இல்லை. இன்னும் சில நாட்களில் அரசின் இந்த முடிவில் மாற்றம் இருக்கலாம்.