ஆதிமூலமான சீனாவில் மீண்டும் உச்சம்பெற்ற கொரோனா – அதிர்ச்சி தரும் காரணம்!

 

ஆதிமூலமான சீனாவில் மீண்டும் உச்சம்பெற்ற கொரோனா – அதிர்ச்சி தரும் காரணம்!

அனைவருக்கும் கொரோனா என்று சொன்னாலே சீனாவின் வூகான் மாகாணம் தான் நினைவுக்கு வரும். இன்று ஒட்டுமொத்த உலகத்தை குறிப்பாக இந்தியாவை ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறது கொரோனா எனும் பெருந்தொற்று. கொரோனா வைரஸின் பிறப்பிடம் என வூகான் மாகாணம் அறியப்படுகிறது. உலகத்துக்கே பரப்பிவிட்ட வூகான் தற்போது அமைதிப் பூங்காவாக இருக்கிறது. இது ஒருபுறமிருக்க சீனாவின் ஐந்து மாகாணங்களில் திடீரென கொரோனா பரவல் அதிகரித்த வண்ணம் உள்ளது.

ஆதிமூலமான சீனாவில் மீண்டும் உச்சம்பெற்ற கொரோனா – அதிர்ச்சி தரும் காரணம்!

இந்தியா உள்பட பெரும்பாலான உலக நாடுகளில் கொரோனா இரண்டாம் அலையின் தீவிரம் குறைந்துவரும் நிலையில், சீனாவில் தொற்று எண்ணிக்கை அதிகமாவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் முழுவதுமாக கொரோனா கட்டுக்குள் உள்ளதாக கூறப்பட்ட நிலையில், ஜியாங்சூ, செச்சுவான், லியானிங், ஹூனான், ஹூபெய் ஆகிய 5 மாகாணங்களில் மீண்டும் வேகமெடுத்துள்ளது. இந்த மாகாணங்களில் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல தலைநகர் பெய்ஜிங் உட்பட 13 நகரங்களிலும் கொரோனா அதிவேகமாகப் பரவுகிறது.

ஆதிமூலமான சீனாவில் மீண்டும் உச்சம்பெற்ற கொரோனா – அதிர்ச்சி தரும் காரணம்!

இதற்குக் காரணம் இந்தியாவில் உருமாற்றமடைந்து இந்தியாவை உலுக்கிய டெல்டா கொரோனா தான் என்று சொல்லப்படுகிறது. டெல்டா கொரோனா இந்தியாவிலிருந்து பல்வேறு நாடுகளுக்குப் பரவி அந்நாடுகளுக்கு மிகவும் அச்சுறுத்தலாக உள்ளது. அதற்கு சீனாவும் விதிவிலக்கில்லாமல் போய்விட்டது. டெல்டா கொரோனா சாதாரண கொரோனாவை விட 50% வேகமாகப் பரவக் கூடியது. அதேபோல நுரையீரல் செல்களுடன் வலுவான பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ளும் ஆற்றல் படைத்தது. 2019ஆம் ஆண்டு இருந்த மோசமான நிலைக்கு சீனா சென்றுகொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.